பஜாஜ் கூட இணைந்ததால தன்னையே பஜாஜ் என நினைச்சுட்டாங்களோ.. கம்மியான விலை மோட்டார்சைக்கிளை களமிறக்கும் டிரையம்ப்!

டிரையம்ப் (Triumph) நிறுவனத்தின் விலை குறைவான மோட்டார்சைக்கிளாக ஸ்பீடு 400 (Speed 400) மாடல் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கை பஜாஜ் (Bajaj) நிறுவனத்துடன் இணைந்தே டிரையம்ப் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்திய சந்தையின் செயல்பாட்டிற்காக பஜாஜ் நிறுவனத்துடன் டிரையம்ப் கை கோர்த்திருக்கின்றது. இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே இரு நிறுவனங்களும் இணைந்து இந்த மலிவு விலை பைக்கை தயார் செய்தன.

இந்த நிலையிலேயே ஸ்பீடு 400 மாடலில் இன்னும் விலை குறைவான ஓர் புதிய தேர்வு இரு நிறுவனங்களும் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இப்போது விற்பனையில் இருக்கும் 2.34 லட்ச ரூபா தேர்வைக் காட்டிலும் விலை மலிவான ஆப்ஷனையே டிரையம்ப் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

triumph affordable speed 400

இந்த ஆப்ஷனின் அறிமுகத்திற்கு இன்னும் வெகுநாட்கள் இல்லை என்கிற தகவலே தற்போது தெரிய வந்திருக்கின்றது. வரும் 17 ஆம் தேதி அன்றே புதிய விலை குறைவான டிரையம்ப் ஸ்பீடு 400 தேர்வின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. இதனை டிரையம்ப் நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

ஓர் டீசர் படத்தை வெளியிட்டே அது இந்த தகவலை டிரையம்ப் உறுதி செய்திருக்கின்றது. புது டெல்லியில் உள்ள புல்மேன் ஏரோசிட்டி-யில் வைத்த தன்னுடைய மற்றுமொரு மாடர்ன் கிளாசிக் பைக்கை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளிலேயே நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

புதிய தேர்வானது இப்போது விற்பனையில் இருப்பவற்றைக் காட்டிலும் விலை குறைவாக இருக்கும் என்பதால் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் அது கவர்ந்திருக்கின்றது. அதேவேளையில், விலை குறைவு என்கிற காரணத்தினால் சில சிறப்பு வசதிகளையும் அது இழக்கும் என்பதை என்பதை நாம் இங்கே கவனத்திக் கொள்ள வேண்டும்.

இருக்கை, திரை, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்-அப் ஆகியவற்றில் இது கொஞ்சம் மாற்றங்களைக் கொண்டிருக்கும். ஆகையால், ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் விலை குறைவான விலையில் இதை எதிர்பார்க்கலாம். ஆனால், இதுபற்றிய எந்தவொரு வார்த்தையையும் டிரையம்ப் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

triumph affordable speed 400

டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் சிறப்புகள்: நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான பைக் மாடல் இதுவாகும். இதில் ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை டிரையம்ப் வழங்கி இருக்கின்றது. மிக இதன் கவர்ச்சியான தோற்றத்திற்காக வட்ட வடிவ அணிகலன்களையே இதில் அதிகம் டிரையம்ப் பயன்படுத்தி இருக்கின்றது.

ஹெட்லைட், ரியர் வியூ மிர்ரர், க்ளஸ்டர் ஆகியவை வட்ட வடிவிலேயே உள்ளன. இதில், வழங்கப்பட்டு இருப்பது அனலாக் ஸ்பீடோ மீட்டர் ஆகும். எல்சிடி திரையுடனேயே இது வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், சிறந் திறனை வெளியேற்றக் கூடிய டிஆர் சீரிஸ் எஞ்சினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இது ஓர் 398.15சிசி, லிக்யூடு கூல்டு, 4 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி (DOHC) மோட்டார் ஆகும். இந்த எஞ்ஜின் 39.5 பிஎச்பி மற்றும் 37.5என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இத்துடன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய வசதிகள் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சஸ்பென்ஷனைப் பொருத்த வரை 43 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், கேஸ் சார்ஜட் மோனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வழக்கமான எஞ்சின் திறன் மற்றும் சிறப்பம்சங்களிலேயே மாறுபட்ட தேர்வாக வரவிருக்கும் புதிய தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. வருகின்ற 17 ஆம் தேதி அன்றே அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2024, 12:45 [IST]
English summary
Triumph to launch more affordable variant of speed 400 check all details here
மேலும்... #triumph #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+