வாழ்க்கைல இதுபோல ஒரு ஆஃபர் வேற எப்பவும் கிடைக்காது.. கொடுக்குற 100 சதவீத பணத்தையும் கேஷ்பேக்கா தருதா டிவிஎஸ்!

சென்னையை தலைமையமாகக் கொண்டு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டிவிஎஸ் (TVS). இந்த நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் பிரிவில் தன்னுடைய பங்களிப்பை வழங்கும் விதமாக ஐக்யூப் (iQube) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒற்றை மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியிலேயே தற்போது டிவிஎஸ் நிறுவனம் களமிறங்கி உள்ளது.

இதன் அடிப்படையிலேயே அது 'டிவிஎஸ் ஐக்யூப் மிட் நைட் கார்னிவல்' (TVS iQube Midnight Carnival) எனும் திட்டத்தை நாட்டில் தொடங்கி இருக்கின்றது. இந்த திட்டம் கடந்த 12ஆம் தேதி அன்றே தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. வருகின்ற 22 ஆம் தேதி இரவு 11.59 வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்கும்.

100 cashback on the purchase of tvs iqube

மொத்தமாகவே பத்து நாட்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த திட்டத்தின்கீழ் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு 100 சதவீத தொகையும் கேஷ்பேக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே, டிவிஎஸ் ஐக்யூப் மிட் நைட் கார்னிவல் திட்டத்தின் சிறப்பு ஆகும்.

இதுமாதிரியான சிறப்பு சலுகைகளை வாகன உற்பத்தியாளர்கள் அறிவிப்பது மிகவும் அபூர்வம் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்ருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஆண்டின் கேஷ்பேக் திட்டத்தை டிவிஎஸ் அறிவித்து இருக்கின்றது. இது தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், நாள் ஒன்றிற்கு ஒருவருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, பத்து நாட்களுக்கு ஒருவர் என பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அவர்கள் செலுத்திய 100 சதவீத பணமும் கேஷ்பேக்காக வழங்கப்பட இருக்கின்றது. அந்த அதிர்ஷ்டகார வாடிக்கையாளர் குலுக்கல் முறை வாயிலாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த சிறப்பு சலுகையை முன்னிட்டு 24X7 ஐக்யூப்பை வாங்குவதற்கான வசதிகளை டிவிஎஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக, சில முக்கியமான பகுதிகளில் டீலர்களும் செயல்படுவார்கள் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் மிட் நைட் கார்னிவல், சலுகை உடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு பலன்களை வழங்க இருப்பதாகவும் டிவிஎஸ் அறிவித்திருக்கின்றது.

5 ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிமீ என்கிற நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டமும் இதில் அடங்கும். இது டிவிஎஸ் ஐக்யூப்-இன் 3.4 kWh தேர்விற்கே பொருந்தும். இதேபோல், 2.2 kWh பேட்டரி பேக் கொண்ட தேர்விற்கு 5 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிமீ நீட்டிக்கப்பட்ட வாரண்டியே வழங்கப்பட இருக்கின்றது.

இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 94,999 என்கிற விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஐக்யூப், ஐக்யூப் எஸ், ஐக்யூப் எஸ்டி என மொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

முதல் வேரியண்டை 2.2 kWh மற்றும் 3.4 kWh பேட்டரி பேக் தேர்விலும், ஐக்யூப் எஸ் வேரியண்டை 3.4 kWh பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். ஐக்யூப் எஸ்டி-இல் 3.4 kWh மற்றும் 5.1 kWh என்கிற இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே டிவிஎஸ் நிறுவனம் 100 சதவீத கேஷ்பேக் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக ஐக்யூப்-இன் விற்பனை வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது ஆனால் இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 19:40 [IST]
English summary
Tvs announced 100 percentage cashback on the purchase of iqube electric scooter
மேலும்... #tvs motor #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+