டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்.. 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசம்!
வருகின்ற பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு சலுகையை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தமிழகத்தைத் தலைமையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் டிவிஎஸ் (TVS) நிறுவனமும் தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு விழாக் கால சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. நிறுவனம் அதன் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலான ஐக்யூப் (iQube)-இன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டே தற்போது சிறப்பு சலுகையை அறிவித்திருக்கின்றது. ரூ. 30 ஆயிரம் வரையில் கேஷ்பேக் வழங்க இருப்பதாகவே அது அறிவித்திருக்கின்றது.
இந்த சிறப்பு சலுகை குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த பட்டியலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, உபி, உத்தர்காண்ட், ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஒடிசா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநில வாசிகளாலும் இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இந்த சிறப்பு சலுகையானது வருகின்ற 31 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. என்ன மாதிரியான சலுகைள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன நீங்கள் கேட்கலாம். உதாரணமாக, நீங்கள் தமிழகம் அல்லது புதுச்சேரி வாசியாக இருப்பின், டிவிஎஸ் ஐக்யூப் எஸ் வேரியண்டை வாங்கினால், உங்களுக்கு ரூ. 5,999 மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டி திட்டம் வழங்கப்படும்.
கூடுதல் கட்டணமின்றியே இந்த சிறப்பு திட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தையே அது நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டமாக வழங்க இருக்கின்றது. இதேபோல், ஐக்யூப் 2.2 kWh வேரியண்டிற்கு ரூ. 17,300 வரையில் கேஷ்பேக்கும், ஐக்யூப் 3.4 kWh வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் வரையில் கேஷ்பேக்கும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
தொடர்ந்து, ஐக்யூப் எஸ்டி வேரியண்டிற்கு ஜூலை 15க்கு முன்னதாகவே ப்ரீ புக்கிங்கை வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. எஸ்டி வேரியண்டில் கிடைக்கும் 5.1 kWh அல்லது 3.4 kWh இந்த இரண்டு பேட்டரி பேக்கிற்கும் இந்த திட்டம் பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுதவிர ஃபைனான்ஸ் பிளானில் வாங்குபவர்களுக்கும் சில சிறப்பு சலுகைகளை டிவிஎஸ் அறிவித்திருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் வரை குறிப்பிட்ட சில வங்கி அட்டைகளுக்கு வழங்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, ரூ. 7,999 என்கிற மிகக் குறைவான முன் கட்டணத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளலாம்.
அத்துடன், ரூ. 2,399 என்கிற மிகக் குறைவான தவனை திட்டத்தையும் டிவிஎஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. எனவே இந்த பண்டிகைக் காலத்தில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு ஏற்கனவே இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி டிவிஎஸ் ஐக்யூப் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகியவையே அவை ஆகும். இதில் ஐக்யூப் வேரியண்டை 2.2 kWh மற்றும் 3.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளிலும், ஐக்யூப் எஸ் வேரியண்டை 3.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஐக்யூப் எஸ்டி வேரியண்டிலும் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. 3.4 kWh மற்றும் 5.1 kWh பேட்டரி பேக்கே அவை ஆகும். மேலும், டிவிஎஸ் ஐக்யூப்-இன் ஆரம்ப விலை ரூ. 94,999 ஆக உள்ளது. அதேவேளையில் இதன் அதிகபட்ச விலை ரூ. 1.85 லட்சமாக உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் விழாக் கால சிறப்பு சலுகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, ஐக்யூப்-இன் விற்பனையை சிறப்பு சலுகை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








