ஓட்டுனா இப்படி ஒரு பைக்கை ஓட்டனும்! இந்த பைக்குல இவ்வளவு டெக்னாலஜி எல்லாம் இருக்குதா?
டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பைக்கை தற்போது அப்டேட் செய்து புதிய எலெக்ட்ரானிக் அம்சங்கள், அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின் புதிய கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் 2.75 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பைக்கை அப்டேட் செய்து தற்போது இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் 2.75 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த பைக் செக்மெண்டிலேயே முதன்முறையாக ஏரோடைனமிக் விங்க்ளெட் கொண்ட பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பைக்கின் ஸ்டெபிலிட்டி அதிகரிக்கும். அதேநேரம் டிராக் குறையும்.

இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை இதற்கு முந்தைய மாடலில் உள்ள இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. 312 சிசி டிஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த இன்ஜின் இதற்கு முந்தைய மாடல் இன்ஜினை விட அதிகமான பவரையும் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உள்ளே இருக்கும் ஃபோர்ஜ்டு பிஸ்டன் எடையை குறைத்துள்ளது. ஏர்பாக்ஸ் பெரிதாக வழங்கியுள்ளது. பாடியும் பெரிதாக வழங்கியுள்ளது. இதனால் பைக்கின் ஒட்டு மொத்த திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பைக் 9,800 ஆர்பிஎம்-ல் 37 பிஎச்பி பவரையும் 7900-ல் 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த பைக் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை இதற்கு முந்தைய இன்ஜின் வெர்ஷன் கொண்ட பைக்கை விட 0.43 நொடிகள் முன்னதாகவே பிக்கப் செய்து விடுகிறது. இதுபோக இந்த பைக்கின் முக்கிய அப்டேட்டாக இதில் பை-டைரக்ஷனல் குயிக் ஸ்விஃப்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இது பழைய மாடலிலும் இருந்தாலும் இதில் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் எலக்ட்ரானிக் பாகங்கள் பல அப்டேட் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த பைக் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இதுபோக கார்னரிங் ஏபிஎஸ், கார்னரின் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லோப் டிபாண்டென்ட் கண்ட்ரோல், ரியர் லிப்ட் ஆப் கண்ட்ரோல், ரேஸ் டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் வடிவமைப்பு இதற்கு முந்தைய மோடுகளின் வடிவமைப்பு போல கிட்டத்தட்ட அதே வடிவமைப்பில் தான் இருக்கிறது. புதிய ஸ்டிக்கர்கள் அங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. புதிதாக கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளன. பாம்பர் கிரே என்ற கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ரேஸிங் ரேட் ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை ரேஸிங் ரெட் கலர் ஆப்ஷன் ரூபாய் 2.75 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இதில் பை டைரக்ஷனில் குயிக் ஸ்விப்ட்டர் ஆப்ஷன் இருக்காது. இந்த பை டைரக்ஷனல் அம்சம் ரூ17,000 கூடுதல் விலையில் விற்பனையாகி வருகிறது. பாம்பே கிரே என்ற புதிய கலர் ஆப்ஷனை பொருத்தவரை ரூ2.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த பைக் முந்தைய மாடல் தயாரிக்கப்பட்ட அதே சேஸிஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்குகளுக்காக இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் 5.0 இன்ச் கொண்ட டிஎஃப்டி ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பெர்பார்மென்ஸ் அதிகரிப்பதற்காக 2 கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி டைனமிக் கிட் என்பது ரூபாய் 18,000 என்ற விலையிலும் டைனமிக் ப்ரோ ரூ 16,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதில் டைனமிக் கிட்டில் முழுமையான அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டர், பிராஸ் கோட் செய்யப்பட்ட செயின் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. டைனமிக் ப்ரோவில் பாதுகாப்பு அம்சங்களுக்காக டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்துள்ளது. புதிய அப்டேட்கள் எல்லாம் தற்போது மார்க்கெட்டில் புதிதாக வந்து தொழில்நுட்பங்களாக இருப்பதால் இந்த அப்டேட்கள் எல்லாம் இந்த பைக்கில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. அதை குறி வைத்து இந்த பைக்கை தற்போது டிவிஎஸ் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









