200 கிமீ வேகத்தை எட்டி பிடித்த டிவிஎஸ் அப்பாச்சி எலெக்ட்ரிக் பைக்! என்ன நடந்தது தெரியுமா?
டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஇ என்ற எலெக்ட்ரிக் பைக் 200 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப் பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. என்னது அப்பாச்சி பைக்கில் எலெக்ட்ரிக் வெர்ஷனா இது என்ன புதுசா இருக்கு என நீங்கள் நினைக்கலாம். அப்பாச்சி பைக்கில் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்படி வந்தது? இதில் 200 கிலோ மீட்டர் வேகம் எப்படி சாத்தியமானது? என்ற அனைத்து விரிவான விபரங்களையும் தான் இங்கே நாம் காணப்போகிறோம்.
டிவிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒன் மேக் சாம்பியன்ஷிப் என்ற போட்டியை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி 200 4v பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் பயன்படுத்தி பைக் ரேஸ் போட்டிகள் நடக்கும். இந்த ஆண்டு முதல்முறையாக டிவிஎஸ் ரேஸிங் போட்டியில் எலெக்ட்ரிக் ஒன் மேக் சாம்பியன்ஷிப் எனப்படும் இ-ஓஎம்சி என்ற போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் பயன்படுத்துவதற்காக டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி பைக்கை எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஇ என்ற பைக்கை இந்த பைக்கை இந்த ரேஸ் போட்டியில் பயன்படுத்தியது. இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்குவதில் பல்வேறு விதமான தொழில்நுட்பம்சங்களை முற்பகுதி சிறந்த பைக்காக உருவாக்கி இருந்தது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த அப்பாச்சி ஆர்டிஇ என்ற எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் போது கிளாஸிலேயே அதிக பவர் டூ வெயிட் ரேஷியோ கொண்ட பைக்காக உருவாக்கியது. இந்த பைக்கில் லிக்யூட் கூல்டு மோட்டார் மற்றும் அதிக திறன் கொண்ட மோட்டார் கண்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி பேக்கை பொருத்தவரை அதிக பவர் கொண்ட கெமிஸ்ட்ரி செல்கள் கொண்டு பேட்டரி பேக் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேட்டரி கேஸ்கள் கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸூசும் சிறப்பாக இருக்கும். வாகனத்தின் வடிவமைப்பின் உறுதி தன்மையும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த பைக்குகளுக்கான தனித்துவமான பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அல்ஹாரிதம் வாகனத்தின் கண்ட்ரோல் மற்றும் பாதுகாப்பிற்கு துணை புரிகின்றன.
இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் செட்டிங்கை செய்ய முடியும். பெர்பார்மென்ஸை பொறுத்தவரை ஒலிம்பிக் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக பிரேக்குகளுக்காக பிரம்போ பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டும் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பிரேக் கேலிபர் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் வீல்கள் கார்பன் பைபர் வீல்களாக வழங்கப்பட்டுள்ளன. அதில் பைரோலி சூப்பர் கரசா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான கிரூப் மற்றும் டிராக்கில் பயணிக்கும் போது துடிப்பான பயணம் மேற்கொள்ள இந்த டயர்கள் உறுதியாக இருக்கும். இந்த பைக்கின் ஏரோடைனமிக் தன்மையை சிறப்பாக வைத்திருக்க கார்பன் பைபர் கொண்டு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர் காற்று அடிக்கும் போதும் அது பெரிய அளவில் பைக்கின் வேகத்தை கட்டுப்படுத்தாது.
இந்த பைக்கை ஓட்டி ரேஸ் நடத்த எட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்கள் நான்கு லேப்கள் கொண்ட போட்டியில் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில் ரேஸர்கள் பைக் ஓட்டும் போது தான் அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் வேகம் வரை பைக்கை ஓட்டினார்கள்.
இதில் வேகமான லேப்பாக 1 நிமிடம் 48.777 நொடிகளில் லேப் எட்டிப் பிடிக்கப்பட்டது. முதல் கட்ட போட்டியில் சர்தாக் சவான் என்பவர் முதலிடத்திலும் சீரான்ட் மற்றும் ஆல்வின் சுந்தர் ஆகியோர் முறையே 2 மற்றும் 3ம் இடத்தை பிடித்தனர். இந்த போட்டி மிக சுவாரஸ்யமாக நடந்தது.
டிரைவிங்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்பை இப்படியாக ரேஸ் போட்டிகளில் பயன்படுத்தி அதன் உறுதித் தன்மை மற்றும் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள் இது சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதை தங்கள் விற்பனை செய்யும் பைக்கில் பொருத்த வாய்ப்புள்ளது. அதனால் விரைவில் அப்பாச்சி பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கூட வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









