கேடிஎம் பைக்குகளுக்கு சவால் விடும் ஸ்டைல்.. யுஎஸ்டி ஃபோர்க்குடன் ரூ. 1.39 லட்சத்திற்கு டிவிஎஸ் பைக் அறிமுகம்!!

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் (TVS), இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டைலான பைக் மாடல்களில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4V)-யும் ஒன்றாகும். இந்த பைக்கையே டிவிஎஸ் நிறுவனம் தற்போது புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது ஓர் புதிய அம்சத்தை சேர்த்து இந்த பைக்கை டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ஓர் அம்சத்தையே டிவிஎஸ் சேர்த்திருக்கின்றது.

இதனால் இன்னும் சிறப்புமிக்க பைக் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாறியிருக்கின்றது. இது ஓர் 1நேக்கட் ரக பைக் மாடல் ஆகும். சமீபத்திலேயே இந்த பைக்கில் கிடைக்கும் வண்ண தேர்வை டிவிஎஸ் அப்டேட் செய்தது. இந்த நிலையிலேயே ரைடர்களுக்கு தேவையான முக்கியமான அம்சத்தைச் சேர்த்து டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Tvs apache rtr 160 4v launched with usd

யுஎஸ்டி (Up-Side Down) ஃபோர்க்கையே அப்பாச்சி 160 4வி பைக்கின் முன் பக்கத்தில் டிவிஎஸ் சேர்த்திருக்கின்றனர். முன்னதாக வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே இந்த பைக்கில் வழங்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அம்சம் சேர்க்கப்பட்ட பின்னரும் பைக்கின் விலை ரூ. 1,39,990 ஆகக் காட்சியளிக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இந்த சிறப்பம்சம் சேர்ப்பைத் தாண்டி வேறு எந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் டிவிஎஸ் செய்யவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், அதே அசத்தலான ஷார்ப்பான தோற்றத்திலேயே அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி இப்போதும் காட்சியளிக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போதும் அதே ஸ்போர்ட்ஸ் பைக்கைப் போலவே இந்த பைக் காட்சியளிக்கின்றது. இந்த தோற்றத்திற்கு சற்றே வலுசேர்க்கும் விதமாகவே டூயல் டோன் நிறங்களால் இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இந்த யுஎஸ்டி ஃபோர்க்கின் மேல் பக்கம் தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இது கூடுதல் கவர்ச்சியான லுக்கை அந்த பைக்கிற்கு வழங்கும் வகையில் உள்ளது. பின் பக்கத்தைப் பொருத்த வரை மோனோஷாக் சஸ்பென்ஷனே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 160 சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 17.55 பிஎச்பி மற்றும் 14.73 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கின் இயக்கத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் அம்சத்தை வழங்கி இருக்கின்றனர். இந்த அம்சத்தின் வாயிலாக பைக்கையும் செல்போனையும் இணைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு செய்வதன் வாயிலாக திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளையும் பைக்கின் திரையில் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், வரும் நாட்களில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அப்பாச்சி பைக்கிற்கு என தனி ரசிகப் பட்டாளமே உண்டு. இவர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த பைக்கில் தற்போது யுஎஸ்டி ஃபோர்க்கை டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது. இது இந்த பைக்கின் இயக்க அனுபவத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2024, 21:23 [IST]
English summary
Tvs apache rtr 160 4v launches with upside down forks at inr 1 39 lakh more details
மேலும்... #tvs motor #tvs apache #india #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+