ஐயப்பனை பார்க்க சபரி மலைக்கு போக போகுதா! முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் இன்னும் அழகா இருக்கும் அப்பாச்சி!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் அதன் புகழ்பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 (Apache RTR 160) மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (RTR 160 4V) ஆகிய மாடல்களில் புதிய சிறப்பு தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை என்ன என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ் பெற்ற பைக் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 160 4வி ஆகியவை இருக்கின்றன. இவற்றிலேயே புதிய தேர்வாக டார்க் எடிசன் (Apache RTR Black Edition) எனும் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

TVS apache rtr 160 black edition

முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலேயே இதற்கு டார்க் எடிசன் எனும் பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. டிவிஎஸ் லோகோ தொடங்கி சைலென்சர் வரை அனைத்திலும் அழகிய கருப்பு நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்தின் வேறு எந்த தயாரிப்பையும் இத்தகைய அலங்கரிப்பில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த டார்க் எடிசன் தேர்வுகளை வழக்கமான தேர்வுகளைக் காட்டிலும் வெறும் ரூ. 1,000 அதிக விலையிலேயே டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. டார்க் எடிசன் அல்லாத வழக்கமான அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரூ. 1.20 லட்சத்திற்கும், இதேபோல், அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ரூ. 1.23 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது.

இந்த விலையுடன் ஆயிரம் ரூபாய் சேர்க்கப்பட்ட நிலையிலேயே அப்பாச்சி ஆர்டிஆர் 160 டார்க் எடிசன் மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி டார்க் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கருப்பு நிற அலங்காரத்தைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த டார்க் எடிசன் பதிப்பில் டிவிஎஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

159 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே இந்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மோட்டார் அதிகபட்சமாக 16.04 எச்பி பவரையும், 13.85 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டவை. அதேவேளையில், ஆர்டிஆர் 160 4வி-யில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 17.55 எச்பி பவரையும், 14.73 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

ஏனெனில், இந்த தேர்வில் உள்ள மோட்டார் 4 வால்வுகளைக் கொண்டதாகும். இதனாலேயே இதன் திறன் வெளியேற்றம் சற்று அதிகமாக உள்ளது. இத்தகைய இரண்டு மாடல்களையே அதிக அழகானதாக, அதாவது, டார்க் எடிசனாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.இதற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிக தொழில்நுட்ப வசதிகளை இந்த பைக்கில் டிவிஎஸ் வாரி வழங்குகின்றது. அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் டெக்னாலஜி, ப்ளூடூத் இணைப்பு, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் காணும் வசதி உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரோடோ பெடல் டிஸ்க் பிரேக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்போர்ட், அர்பன் மற்றும் மழை ஆகிய மூன்று விதமான ரைடு மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை அப்பாச்சி ஆர்டிஆர் 160 கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவர்ச்சி மற்றும் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு பெயர்போனதே டிவிஎஸ் அப்பாச்சி பைக் மாடல் ஆகும். இந்த பைக்கிற்கு இன்னும் கூடுதல் அழகை டிவிஎஸ் சேர்த்திருக்கின்றது என்றே கூறலாம். எனவே மற்ற வழக்கமான அப்பாச்சி பைக்குகளைக் காட்டிலும் இது சற்று அதிக கவன ஈர்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2024, 21:06 [IST]
English summary
Tvs apache rtr 160 and apache rtr 160 4v got black edition
மேலும்... #டிவிஎஸ் #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+