கேடிஎம் எல்லாம் ஓரம்போ... தமிழ்நாட்டிலேயே இப்படியொரு பைக் தயாராகும்போது வேற பைக் எதற்கு?

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளுள் ஒன்றாக அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி (Apache RTR160 4V) விளங்குகிறது. இதன் காரணமாகவே இந்த மோட்டார்சைக்கிளை அவ்வப்போது டிவிஎஸ் நிறுவனம் மறக்காமல் அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில், அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மீண்டும் மேம்படுத்தப்பட்ட அப்டேட் வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதையும், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் உலகின் பல நாடுகளில் தனது 2-வீலர் & 3-வீலர்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி உள்ளது.

tvs apache rtr160 4v launched

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் அதிகம் விற்பனையாகும் பைக், அப்பாச்சி ஆர்டிஆர்160 ஆகும். இத்தகைய பைக்கை தான் தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய அப்பாச்சி பைக்கில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான அப்டேட் என்றால், இந்த பைக்கில் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளை வழங்கியுள்ளனர். 160சிசி பைக்குகளிலேயே யுஎஸ்டி ஃபோர்க்குகளை முன்பக்க சஸ்பென்ஷனுக்கு பெற்றுள்ள முதல் பைக் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி ஆகும். அதுமட்டுமின்றி, பிரிவிலேயே முதல் பைக்காக புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி ரைடிங் மோட்களை பெற்றுள்ளது.

tvs apache rtr160 4v launched

இதன்படி, ஸ்போர்ட், அர்பன் மற்றும் மழை என 3 விதமான ரைடிங் மோட்களை இந்த புதிய அப்பாச்சி பைக்கில் பெறலாம். இந்த ரைடிங் மோட்கள் பைக்கின் கண்ட்ரோல், ஸ்டெபிளிட்டி மற்றும் அடாப்டபிளிட்டியை மாற்றும். புதிய யுஎஸ்டி சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் மற்றும் ரைடிங் மோட்களை தவிர்த்து டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் வேறெந்த மெக்கானிக்கல் அப்டேட்களும் கிடையாது.

அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் 159.7சிசி, ஆயில்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட், 4-வால்வு எ்ன்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 17.3 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 14.73 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் புதிய யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பின்பக்கத்தில் வழக்கமான மோனோஷாக் தொடரப்பட்டுள்ளது.

tvs apache rtr160 4v launched

பிரேக் பணிகளுக்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கிலும் 17-இன்ச் சக்கரங்களே கொடுக்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பாருக்கு மத்தியில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் டிஸ்பிளே டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் உடன் உள்ளது.

இதன் மூலமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மொபைல் அழைப்பு & குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ப்ளூடூத் வாயிலாக வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்டவற்றை பெறலாம். புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கிலும் டிவிஎஸ் மோட்டாரின் க்ளைமேட் த்ரூ டெக்னாலஜி வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் எளிதாக பயணிப்பதற்கு உதவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் பல்சர் பைக்குகளை போன்று, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு அப்பாச்சி பைக்குகள் உள்ளன. கடந்த காலங்களில் இருந்து அப்பாச்சி பைக்குகள் பலமுறை பல்வேறு விதங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இம்முறை சஸ்பென்ஷன் & ரைடிங் மோட்கள் என அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2024, 23:46 [IST]
English summary
Tvs apache rtr160 4v updated version launched in india price new features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X