பி.எம்.டபிள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் உருவாக்கிய பைக் - அப்பாச்சி ஆர்டிஆர்310!! ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் அதன் புதிய மோட்டார்சைக்கிளாக ஆர்டிஆர்310 (RTR310) மாடலை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. ஆர்.ஆர்310 பைக்கை போல், இந்த பைக்கையும் பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இது ஒரு நேக்டு ரக பைக் ஆகும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக் ஓட்டுவதற்கு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய நாங்கள் இதை டெஸ்ட் ரைடு செய்து பார்த்தோம். புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 உண்மையில் சூப்பராக உள்ளது. இந்த பைக் தொடர்பான எங்களது விமர்சனங்களை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த மஞ்சள் நிற அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் கிட்டத்தட்ட 6 நாட்கள் எங்களிடம் இருந்தது. இத்தனை நாட்களில் நாங்கள் வெவ்வேறு ஆட்கள் ஓட்டிப் பார்த்து, அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை ஒன்றாக தொகுத்து இந்த ரிவியூ வீடியோவில் வழங்கியுள்ளோம். பொதுவாகவே, டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ரக்டான தோற்றத்தை கொண்டவை. புதிய ஆர்டிஆர்310 பைக்கில் அது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாக, இந்த பைக்கின் முன்பக்க ஹெட்லைட் ஆனது இரவு நேரத்தில் 'டெவில்' லைட் போன்று ஒளிர்கிறது. இந்த பைக்கின் ஹெட்லைட்டும், டி.ஆர்.எல்-களும் இருட்டை உணர்ந்து செயல்படக்கூடியவை. அதாவது பகல் நேரத்தில் இவை ஒளிராது. அதேபோல் இந்த பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷனை பற்றியும் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் தொடர்பான கூடுதல் ரிவியூ-வுக்கு மேலே உள்ள வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications








