இத்தாலியையும் விட்டு வைக்கல!.. டிவிஎஸ் செய்த சம்பவத்த பார்த்து தமிழ்நாடே பெருமை கொள்ளுது..
தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைக் கொள்ளும் வகையிலான தரமான சம்பவத்தையே நம்ம டிவிஎஸ் (TVS) நிறுவனம் தற்போது செய்திருக்கின்றது. அப்படி என்ன சம்பவத்தை அது செய்திருக்கின்றது என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
தமிழகத்தை தாயமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில், டிவிஎஸ் நிறுவனம் 80க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தன்னுடையக் கால் தடத்தைப் பதித்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே புதிய நாடாக டிவிஎஸ் நிறுவனம் இத்தாலியிலும் தன்னுடைய வருகையைப் பதிவுச் செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியர்களின் பிரியமான இரண்டு சக்கர வாகன மாடல்களையே இத்தாலியர்களுக்கும் விற்பனைக்கு வழங்க டிவிஎஸ் திட்டமிட்டு இருக்கின்றது. அப்பாச்சி ஆர்ஆர்310, அப்பாச்சி ஆர்டிஆர் 310, ரைடர் ஆகிய பைக் மாடல்களையே இத்தாலியில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய அது பிளான் போட்டு உள்ளது.
இதுதவிர, நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களான என்டார்க் மற்றும் ஜுபிடர் 125 மாடல்களையும் அது அங்கு விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி, தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இத்தாலி நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. ஐ-க்யூப் மற்றும் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே அது அங்கு விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
இதுதவிர இன்னும் சில இரண்டு சக்கர வாகன மாடல்களையும் விரைவில் இத்தாலியில் டிவிஎஸ் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஏற்கனவே இத்தாலி நாட்டில் இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய போட்டியான சூழலே நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தமிழகத்தில் இருந்து மிகவும் புறப்பட்டு சென்றிருக்கின்றது நம் டிவிஎஸ் நிறுவனம்.
இதுவே ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. விரைவில் இத்தாலி நாட்டில் நம் இந்தியாவின் கொடி டிவிஎஸ் நிறுவனத்தின் வாயிலாக பறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த விரிவாக்கத்தின் வாயிலாக டிவிஎஸ் தனக்கு இருக்கும் செல்வாக்கை மேலும் விரிவாக்கி இருக்கின்றது.
ஏற்கனவே, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவின் துணைக் கண்டங்கள், லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என பல வளர்ந்த மற்றும் வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடுகளில் டிவிஎஸ் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இத்தாலியிலும் அதன் கால் தடத்தைப் பதித்து உள்ளது.
சென்ற ஆண்டின் இறுதியின் வெனிசுலா நாட்டில் கால் தடம் பதித்த நிலையிலேயே தற்போது இத்தாலியில் டிவிஎஸ் வர்த்தக பணிகளைத் தொடங்கி இருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. இந்த நாட்டிலும் தன்னுடைய மலிவு விலை ஸ்போர்ட்டி லுக் கொண்ட பைக் மாடலான ரைடர் 125-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இதுதவிர, எக்ஸ்எல்100, டிராக் 150, ஸ்போர்ட் 100, எச்எல்எக்ஸ், ஸ்ட்ரைகர் மற்றும் என்டார்க் உள்ளிட்ட இருசக்கர வாகன மாடல்களையும் வெனிசுலா நாட்டில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றுடன், அப்பாச்சி சீரிஸில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து பைக் மாடல்களும், கிங் ஜிஎஸ் மற்றும் கிங் கார்கோ ஆகிய மூன்று சக்கர வாகன மாடல்களும் வெனிசுலா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன பிரிவில் இந்தியாவின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் தயாரிப்பாக டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பையே இத்தாலியிலும் டிவிஎஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








