67 கி.மீ மைலேஜ் தரும் தமிழ்நாடு மேடு ஸ்டார் சிட்டி பைக்கிற்கு வெளிநாட்டில் செம டிமாண்ட்!
டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பைக்கை வெளிநாட்டில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி வருகிறார்கள். இதனால் இந்த பைக் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. அந்நிறுவனம் ஏற்றுமதி செய்யும் பைக்குகளிலேயே அதிக எண்ணிக்கையில் இந்த பைக் தான் ஏற்றுமதியாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனத்தின் கடந்த மார்ச் மாத விற்பனை விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மட்டும் 81,846 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 64,591 பைக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. அதன்படி தற்போது ஒரே ஆண்டில் 17,255 வாகனங்கள் கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கின் ஏற்றுமதி எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 34,897 ஸ்டார் சிட்டி பைக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 27,136 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது மட்டும் 28.60% அதிகமாக ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இந்த ஸ்டார் சிட்டி பைக் மட்டும் 42.64% அளவிற்கு மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி பைக் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகியுள்ளன. அதன்படி கடந்த மார்ச் மாதம் 11,408 பைக்குகள் ஏற்றுமதியாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 536 பைக்குகள் தான் ஏற்றுமதியாகியிருந்தது. இது 126.53% ஏற்றுமதி வளர்ச்சியாகும். கடந்தாண்டு ஏற்றுமதியானதை விட இரு மடங்கிற்கும் அதிகமான அளவில் ஏற்றுமதியாகியுள்ளது.

அடுத்ததாக டிவிஎஸ் ரைடர் பைக்கை பொறுத்தவரை கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 3346 பைக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன. ஆனால் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 745 பைக்குகள் ஏற்றுமதியாகியிருந்தது. இருப்பதிலேயே அதிக அளவிலான ஏற்றுமதி வளர்ச்சியை பெற்றது இந்த பைக் தான். மொத்தம் 161.36% ஏற்றுமதி வளர்ச்சியை பெற்று உள்ளது.
அடுத்த இடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 5,917 ஸ்கூட்டர்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது கடந்தாண்டு விற்பனையை விட 31.21% அதிகமாகும். அடுத்ததாக டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் இருக்கிறது. இந்த பைக் கடந்த மார்ச் மாதம் 562 பைக்குகள் ஏற்றுமதியாகி உள்ளன. இது 45.91% வளர்ச்சியாகும்.

அடுத்ததாக டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை பொறுத்தவரை 2764 ஸ்கூட்டர்கள் ஏற்றுமதியாகி உள்ளன. டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ பொருத்தவரை 496 வண்டிகள் ஏற்றுமதியாகி உள்ளன. இந்த இரண்டு வாகனங்களும் கடந்த ஆண்டு ஏற்றுமதியை விட வீழ்ச்சியை சந்தித்துள்ளன. புதிதாக அறிமுகமாகியுள்ள டிவிஎஸ் ரோனின் பைக்கை பொருத்தவரை 416 பைக்குகள் கடந்த மாதம் ஏற்றுமதியாகியுள்ளன.
டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி 310 பைக்கின் விற்பனையை பொருத்தவரை கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 90 பைக்குகள் தான் ஏற்றுமதியாகியிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 166 பைக்குகள் ஏற்றுமதியாகி உள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு ஸ்கூட்டர் கூட ஏற்றுமதியாகவில்லை. ஆனால் கடந்த மார்ச் மாதம் 40 ஸ்கூட்டர்கள் ஏற்றுமதியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் டூவீலர்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்டார் சிட்டி பைக் இந்தியாவில் தற்போது பெரிய அளவில் விற்பனையில் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் இந்த பைக்கிற்கு நல்ல மவுசு இருக்கிறது. 67 கிலோ மீட்டர் அளவுக்கு மைலேஜ் கொடுப்பதுதான் வெளிநாட்டில் இந்த பைக்கிற்கு நல்ல மவுசு இருப்பதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









