டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ல இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? விளக்கமான வீடியோ இதோ!
டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரண்டு புதிய வேரியன்ட்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வேரியன்ட் போக இந்த இரண்டு வேரியன்ட் சேர்த்து மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. புதிதாக அறிமுகமான வேரியன்டில் குறைந்த விலை வேரியன்டும் இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வேரியன்டில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இதன் பேட்டரி ஆப்ஷன்களை எப்படி இருக்கிறது? இதன் ரேஞ்ச் என்ன? என்ற அனைத்து விபரங்களையும் விளக்கமாக உங்களுக்கு தெரிவிக்கும் வகையில் வீடியோவாக வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதன்படி 2.2 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 94,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது 0 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றி விடும். மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மற்றொரு வேரியண்டில் 5.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன் இருக்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 0-80 சதவீத சார்ஜை நான்கு மணி நேரம் 18 நிமிடத்தில் ஏற்றி விடுகிறது. இந்த வேரியன்டின் விலையை பொருத்தவரை 1.83 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








