தமிழக தயாரிப்பை பார்த்து வியந்துபோன வெளிநாட்டு மக்கள்! 3லட்சம் கஷ்டமர்களை கொண்ட தயாரிப்பிற்கு இதுலாம் சாதாரணம்

தமிழகத்தை மையமாகக் கொண்டு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company). இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)-தான் அது ஆகும். இது ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Premium Electric Scooter) மாடல் ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக், பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்குப் போட்டியாக டிவிஎஸ் ஐக்யூப் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

TVS iqube at makina motoshow

உலக அளவில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும் டிவிஎஸ் ஐக்யூப் காட்சியளிக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே உலக அரங்கு ஒன்றில் டிவிஎஸ் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. மகினா மோட்டோ ஷோ (Makina MotoShow)-விலேயே இது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா எனும் பகுதியிலேயே இந்த உலக புகழ்பெற்ற மோட்டார் வாகன கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கேயே டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. நகர பயன்பாட்டிற்கு உகந்த மிகவும் ஸ்டைலான ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே டிவிஎஸ் ஐக்யூப் ஆகும்.

TVS iqube at makina motoshow

அதிக ஸ்டைல் மற்றும் பிரீமியம் அம்சங்களை அதிகமாகக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த வாகனத்திற்கு மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது வெறும் ஸ்டைலான மின்சார வாகனம் மட்டுமல்ல அதிக திறன் மற்றும் அதிக பயன்பாட்டை வழங்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் டூ-வீலரும் கூட என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓர் முழுமையான சார்ஜில் 100 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும். வேகம் குறைவாகவும், பெரிய அளவில் மின்சாரத்தை வீணடிக்காமலும் இந்த வாகனத்தை பயன்படுத்தினால் மட்டுமே மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 3.4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 78 கிமீ ஆகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் டிவிஎஸ் ஐக்யூப் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகியவையே அவை ஆகும். இதில் ஐக்யூப் எஸ்டிக்கான புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.

விரைவில் இதை நிறுவனம் விற்பனைக்கு வழங்கும்விதமாக அதற்கான புக்கிங்கைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பதிலேயே அதிக அம்சங்களும் அதிகம் ரேஞ்ஜைத் தரக் கூடிய மின்சார வாகனமாக ஐக்யூப் எஸ்டி-யே இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 145 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 82 கிமீ ஆகும்.

பகல்நேரத்தில் ஒளிரும் மின் விளக்குடன் கூடிய ஸ்மார்ட் எல்இடி ஹெட்லைட், எச்எம்ஐ கன்ட்ரோல்லர்கள், 32 லிட்டர் அளவுள்ள பெரிய ஸ்டோரேஜ் (இரண்டு ஹெல்மெட்டைகூட இதில் வைக்கலாம்), 17.78 செமீ அளவுள்ள தொடுதிரை டேஷ்போர்டு மற்றும் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிவிஸ் வழங்கி இருக்கின்றது. ரூ. 1.37 லட்சம் தொடங்கி ரூ. 1.47 லட்சம் என்கிற விலையில் டிவிஎஸ் ஐக்யூப் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தமிழக தயாரிப்பு உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமையான தருணமாக அமைந்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குறுகிய கால சலுகையாக 5 ஆண்டுகள் / 70 ஆயிரம் கிமீ கூட்டப்பட்ட வாரண்டி ரூ. 3,262க்கு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 28, 2024, 17:55 [IST]
English summary
Tvs iqube electric scooter showcased at makina motoshow
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+