எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கம்மியான விலையில் வாங்குவது எல்லாம் இனி முடியாது!! டிவிஎஸ் மோட்டாருக்கே இந்த நிலைமையா!!

ஐ-க்யூப் (iQube) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை வேறு வழியில்லாமல் கொஞ்சம் வருத்தத்துடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டில் அதிகரித்தது. இந்த நிலையில், ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சுமார் ரூ.41,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எவ்வளவு குறைவான விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? என்பதையும், இந்த சலுகைகள் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்பதையும் இனி பார்க்கலாம்.

பசுமையான போக்குவரத்துக்கு மட்டுமில்லாமல், எரிபொருள் செலவு குறைந்த போக்குவரத்துக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றவையாக விளங்குகின்றன. அரசாங்கத்தை பொறுத்தவரையில், மற்ற நாடுகளிடம் இருந்து பெட்ரோல்/ டீசலுக்கான கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டி இருக்காது. இதன் மூலமாக நாட்டிற்கு நிறைய வருவாயை பெருக்க முடியும். இதன் காரணமாகவே, நம் இந்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

tvs iqube price will hike

இதற்காக 2019ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த அருமையான திட்டம் தான் ஃபேம்-2 (FAME II) ஆகும். FAME II - Faster Adoption and Manufacture of Electric Vehicles), அதாவது எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதையும், உற்பத்தி செய்வதையும் விரைவுப்படுத்தும் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மானியமாக எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு செல்கிறது.

இதன் மூலமாக, எலக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலையில் உற்பத்தி நிறுவனங்களால் விற்க முடிந்தது. இதன்படி, நம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் அதன் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப சில மாதங்களுக்கு டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை பெரியதாக இல்லையென்றாலும், அதன்பின் வேகமெடுக்க ஆரம்பித்தது.

இன்று இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக டிவிஎஸ் ஐக்யூப் விளங்குகிறது. ஆனால் இதன்பின்புதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஃபேம்-2 திட்டத்தில் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மானியம் குறைத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த 2024 மார்ச் மாதத்துடன் ஃபேம்-2 மானியங்கள் அனைத்தும் நிறுத்திக் கொள்ளப்பட உள்ளன.

ஃபேம்-2 மானியங்களை வழங்குவதை அரசாங்கம் மேலும் நீட்டிகுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல், ஃபேம்-2 மானியங்கள் நிறுத்திக் கொள்ளப்பட்டால், அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு எலக்ட்ரிக் வாகனத்தின் விலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அதிகரிக்கப்படும். இதனால், தங்களது ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த மார்ச் மாதத்திற்கு உள்ளாக மானியத்துடன் குறைந்த விலையில் புக் செய்துவிடுங்கள் என டிவிஎஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

tvs iqube price will hike

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மானியமாக ரூ.22,065 வழங்கப்பட்டு வருகிறது. இது வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்போதே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால், ரூ.22,065 மிச்சப்படுத்த முடியும். இந்த மார்ச் மாதத்திற்குள் முடிந்த வரையில் நிறைய ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய விரும்பும் டிவிஎஸ் நிறுவனம் இதற்காக சில சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகைகளின்படி, டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த மாதத்தில் ரூ.41,000 வரையிலான குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ரூ.41,000இல் மானிய தொகையான ரூ.22,065 கழிய, மற்ற சலுகைகளாக பணம் தள்ளுபடி, இலவச வாரண்டி உள்ளிட்டவற்றை இந்த மார்ச் மாதத்தில் பெறலாம்.

டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு டிவிஎஸ் நிறுவனம் அனுப்பியதாக நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மாதத்திற்குள் இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் ரூ.6,000 பணம் தள்ளுபடியையும், 'நோ காஸ்ட் இஎம்ஐ'-இல் வாங்குபவர்கள் மட்டும் கூடுதலாக ரூ.7,500 பணம் தள்ளுபடியையும் பெறலாம். பொதுவாக, ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டியை அதிகரிக்க ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்த மார்ச் மாதத்தில் இந்த இ-ஸ்கூட்டரை புக் செய்பவர்கள் மட்டும் இலவசமாக வாரண்டியை அதிகரித்துக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சலுகைகள் வருகிற 2024 மார்ச் 31ஆம் தேதி வரையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், டிவிஎஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் மார்ச் 25ஆம் தேதிக்குள் மானியத்துடன் ஐக்யூப் ஸ்கூட்டரை வாங்கிவிடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை மானியம் மார்ச் 25ஆம் தேதியோடு நிறைவடைந்து விடுமா என்பது தெரியவில்லை. கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டிவிஎஸ் டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2024, 18:41 [IST]
English summary
Tvs iqube price will be hike from april now get subsidy check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+