இவ்வளவு கம்மி விலையில் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? ஓலா, ஏத்தர் எல்லாம் தலையில துண்டை போட வேண்டியது தான்!

டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்போது புதிதாக இரண்டு வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 2.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஒரு வேரியன்ட்டும் 3.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஒரு வேரியன்டும் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னும் தற்போது விற்பனையாகி வருகின்றன. இதில் டிவிஎஸ் நிறுவனம் தற்போது ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐகியூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

tvs iqube ST

ஸ்கூட்டர் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது அதில் இரண்டு புதிய வேரியன்ட்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது. அதன்படி டிவி ஸ்கூட்டரில் 2.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஒரு ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விலையாக ரூபாய் 94,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 0 முதல் 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய வெறும் 2 மணி நேரம் தான் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டராக அறிமுகம் செய்துள்ளது. இதில் முக்கியமாக 5 இன்ச் கொண்ட கலர் டிஎப்டி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது.

tvs iqube ST

இதில் வாகனத்தின் பாதுகாப்பிற்காக வாகன கிராஸ் மற்றும் டோ அலர்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன. இதுபோக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் இருக்கிறது. இந்த வாகனத்தின் சீட்டுக்கு அடியில் 30 லிட்டர் அளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மொத்தம் இரண்டு விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி வால்நட் பிரெளன் மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய நிறங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்கூட்டருடன் சேர்த்து டிவிஎஸ் நிறுவனம் தனது ஸ்கூட்டரின் எஸ்டி வேரியன்ட்களை டெலிவரி செய்யவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த ஸ்கூட்டர் 3.4 கிலோ வாட் ஹவர் மற்றும் 5.1 கிலோ வாட் ஹவர் ஆகிய இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலையை பொறுத்த வரை முறையே ரூ1.55 லட்சம் மற்றும் ரூ1.83 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

tvs iqube ST

இதில் 3.4 கிலோ டவர் வேரியன்டை பொறுத்தவரை முழு பேட்டரியை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 0 முதல் 80 கிலோமீட்டர் சார்ஜர் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

5.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை பொருத்தவரை செக்மெண்டிலேயே அதிக பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டராக இதுதான் இருக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 150 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை 0 முதல் 80 சதவீத சார்ஜ் ஏற்ற 4 மணி நேரம் 18 நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறது.

tvs iqube ST

டிவிஎஸ் ஐகியூப் வேரியன்டை பொறுத்தவரை 7 இன்ச் கொண்ட டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் கனெக்டட் அம்சங்கள் 32 லிட்டர் கொண்ட பூட் ஸ்பேஸ் வசதி ஆகியன உள்ளன இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 82 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே ஸ்கூட்டரில் 3.4 கிலோ வாட் ஹவர் வெர்ஷன் இருக்கிறது. இதைப் பொறுத்தவரை அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயனிக்கும்படி லிமிட் செய்யப்பட்டுள்ளது மற்றபடி எல்லாம் 5.1 கிலோ வாட் ஹவர் வேரியன்டில் உள்ள அதே அம்சங்கள் இந்த ஸ்கூட்டரிலும் இருக்கிறது.

இந்த ஸ்கூட்டர் மொத்தம் ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி காப்பர் பிரான்ஸ் மேட், கோரல் சாண்ட் ஸ்டைன், டைட்டானியம் கிரே மேட், மற்றும் ஸ்டார் லைட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. இதனால் இதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இதில் இரண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் அதிகமான விற்பனையை பெற திட்டமிட்டுள்ளது. மேலும் ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பலர் இதை வாங்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 7:00 [IST]
English summary
Tvs iqube st new variant launch priced at rs 94999
மேலும்... #டிவிஎஸ் #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X