இரண்டில் எதை வாங்குவது என நிச்சயமா குழப்பமா இருக்கும்... டிவிஎஸ் இ-ஸ்கூட்டருக்கு போட்டியா பஜாஜ் ஸ்கூட்டர்!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உற்பத்தியில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்காகவே பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சமீப காலங்களில் நம் நாட்டில் புதியதாக தோன்றியுள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் ஈடுப்படும் முன்னணி 2-வீலர் நிறுவனங்களாக டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளன. இவை இரண்டும் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்றன. விலையில் இவை இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், நிறைய விஷயங்களில் வேறுப்படுகின்றன.
விலை: டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் இரண்டின் விலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. 5 விதமான வேரியண்ட்களில், 3 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.17 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த ரூ.1.17 லட்சத்தில் 2.2kWh பேட்டரி உடன் ஐக்யூப் ஸ்கூட்டர் கிடைக்கிறது. மறுப்பக்கம், 6 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் பஜாஜ் சேத்தக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் பெரிய அளவில் வித்தியாசப்படுகின்றன. ஏனெனில், டிவிஎஸ் ஐக்யூப் ஆனது மாடர்ன் தோற்றத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஆனால், பஜாஜ் சேத்தக் ஆனது பழமையான ஸ்கூட்டர்களை போன்று கிளாசிக் தோற்றத்தை கொண்டது. 1980, 90களில் பிரபலமாக இருந்த பஜாஜ் சேத்தக்கின் பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2020ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தது.
இதே 2020ஆம் ஆண்டில்தான் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டது. டிவிஎஸ் ஐக்யூப் உடன் ஒப்பிடுகையில் பஜாஜ் சேத்தக் ஆனது சற்று நீளமானது ஆகும். ஒரே மாதிரியான டிசைனில் ஹெட்லைட்கள் இந்த இரு ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதில்லை. ஆனால், இரண்டிலும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. ஐக்யூப்பில் பிஎல்டிசி மோட்டார் வாங்கப்படுவதால், மோட்டார் ஆனது ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
வசதிகள்: டிவிஎஸ் ஐக்யூப்பில் வழங்கப்படும் 7 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் டிஎஃப்டி திரை மூலமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மொபைல் போன் அழைப்பு, குறுஞ்செய்தி & சோயியல் மீடியா நோட்டிஃபிகேஷன்ஸ், காகிதங்களை வைப்பதற்கு ஸ்டோரேஜ், மியுசிக் கண்ட்ரோல், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் உள்ளிட்டவற்றை பெறலாம்.
பஜாஜ் சேத்தக்கில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஆன்போர்டு மியுசிக் கண்ட்ரோல், கால் அலார்ட்ஸ் உள்ளிட்டவற்றை பெறலாம். சேத்தக்கில் டக்பேக் என்கிற கூடுதல் அம்சம் வழங்கப்படுகிறது. இதனை பெற கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலமாக, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் மோட் உள்ளிட்டவற்றை பெறலாம்.

ரேஞ்ச்: பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு மைலேஜ் போன்று, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரேஞ்ச் ஆகும். டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் 3 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், பஜாஜ் சேத்தக்கில் ஒரேயொரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. சேத்தக்கில் கொடுக்கப்படும் 3.2kWh பேட்டரி உடன் ஐக்யூப்பின் 3.4kWh பேட்டரியை ஒப்பீடு செய்து பார்த்தால், இரு ஸ்கூட்டர்களிலும் கிடைக்கும் ரேஞ்சில் பெரியதாக வித்தியாசம் இல்லை.
ஐக்யூப்பின் 3.2kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 120கிமீ-இல் இருந்து 100கிமீ வரையில் பயணிக்கலாம். மறுப்பக்கம் பஜாஜ் சேத்தக்கின் ரேஞ்ச் 126கிமீ ஆகும். இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் வீட்டிலேயே சார்ஜ் செய்துக் கொள்வதற்கான சார்ஜிங் வசதி கொடுக்கப் படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை பார்த்து, இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எதை வாங்குவது என யோசிப்பவர்களுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும். தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவற்றிலும் இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆதலால், ஐக்யூப் மற்றும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தோற்றத்தை பார்த்தே வாங்க வேண்டும். அதாவது, இன்றைய கால மாடர்ன் தோற்றத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஐக்யூப் ஏற்றதாக இருக்கும். அதேநேரம், பழமையான வாகனங்களின் டிசைனில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சேத்தக் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








