இன்னும் 10 நாள் கூட இல்ல! எல்லாரும் இப்பவே பணத்தை ரெடி பண்ணி வச்சிக்கோங்க!
டிவிஎஸ் நிறுவனம் தனது ஜுபிடர் 110 என்ற ஸ்கூட்டரை அப்டேட் செய்து வரும் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் இந்த ஸ்கூட்டரின் டிசைனிங் உட்பட பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. முற்றிலும் புதிய லுக்கில் வரப்போகும் இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது என்டார்க் என்ற ஸ்கூட்டரின் புதிய கலர் ஸ்கீம்களை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து இந்நிறுவனம் வரும் 22ம் தேதி தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு இந்த அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்துகிறது. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் செய்யப்பட உள்ளன..

இந்த அப்டேட்டுகள் குறித்து டிவிஎஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏதோ தகவலையும் தெரிவிக்க விட்டாலும், நமக்கு சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இந்த ஸ்கூட்டரின் முன் பக்கம் ஹரிசாண்டல் அமைப்பில் எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது விற்பனையாகி வரும் மாடலை ஒப்பிடும்போது, புதிதாக வரப்போகும் அப்டேட்டில் பல்வேறு விதமான டிசைன் அப்டேட்கள் கொடுக்கப்பட்டு முற்றிலுமாக புதிய லுக்கில் இந்த ஸ்கூட்டர் காட்சியளிக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
முக்கியமாக இந்த ஸ்கூட்டரின் முன் பக்கம் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இது போக பக்கவாட்டுப்பகுதி பின் பகுதியிலும் ஏராளமான மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த அப்டேட்களை காண தற்போது டிவிஎஸ் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

டிவிஎஸ் நிறுவனம் தனது ஜுபிடர் 110 ஸ்கூட்டரை கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முதலில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதல் இந்த ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டராக இந்திய மார்க்கெட்டில் களம் கண்டு வருகிறது. முக்கியமாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர் ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது .
இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்து போட்டி நிறுவனங்களின் தயாரிப்புக்கு இணையாக தனது தயாரிப்பையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் வருங்காலத்தில் அதிகமாகவார்கள். மேலும் இளைஞர்கள் பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்குவார்கள் என்ற எண்ணத்தில் இந்த அப்டேட்டை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கும் அதே 109.7 சி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இது 7.77பிஎச்பி பவரையும் 8.8என்எம் டார்க் திறனையும்ம் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. தற்போது இந்த ஸ்கூட்டர் ரூ77,100 என்ற விலையில் ஆரம்பமாகி ரூ92,700 வரை விற்பனையாகி வருகிறது.
தற்போது விற்பனையாகி வரும் ஸ்கூட்டரின் உள்ள சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அம்சங்கள் புதிய அப்டேட்டில் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாகனத்தின் பெர்பார்மன்ஸ் சிறப்பாக மேம்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே தனது ஜுபிடர் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் வழங்கி வருகிறது. வரும் அப்டேட் மாடலும் இதே கனெக்டிவிட்டி அம்சம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ஸ்கூட்டர் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் ஒரு பக்கம் விரும்பினாலும் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு மவுசு இருக்க தான் செய்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் பெட்ரோல் தான் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. இதனால் தொடர்ந்து மக்களை பெட்ரோல் ஸ்கூட்டர் பக்கம் ஈர்க்க வைக்க இப்படியான அப்டேட்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர் ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தற்போதும் விரும்பி வாங்கி வருகிறார்கள். தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட் அறிமுகமான பின்பு இதன் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








