ஆக்டிவா எல்லாம் ஓரமா போ! டிவிஎஸ் நாளைக்கே இப்படி ஒரு வண்டிய கொண்டு வரப்போறாங்க!

டிவிஎஸ் நிறுவனம் நாளை தனது ஜுபிடர் 110 என்ற ஸ்கூட்டரை அப்டேட் செய்து வெளியிடப் போகிறது. இந்த ஸ்கூட்டரில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மெக்கானிக்கல் ரீதியாக பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், லுக் ரீதியாக மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அப்படியாக இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிஎஸ் ஜூபிடர் 110 என்ற ஸ்கூட்டரை நாளை மதியம் 12:05 மணிக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை ஸ்கூட்டரில் பல்வேறு விதமான அப்டேட்டுகள் செய்யப்பட உள்ளன. அதில் முக்கியமாக இந்த பைக்கின் முன்பக்க எல்இடி டிஆர்எல் மாற்றியமைக்கப்பட்டது குறித்தும் பைக்கின் முன்பக்க வடிவமைப்பு மாற்றி அமைக்கபட்டது குறித்தும் பல்வேறு அப்டேட் வெளியாகியிருந்தன.

tvs jupiter 110 launch

புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் பல்வேறு விதமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள மாடலிலிருந்து முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம், பின் பக்கம், ஏன் பக்கவாட்டில் கூட மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தான் இந்த ஸ்கூட்டர் முதன் முதலில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியிருந்தது.

இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகும் போதே ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் நல்ல பெயர் இருந்ததால் அந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் அறிமுகமானது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் இதன் முக்கிய அப்டேட்டாக புதிய பெயிண்ட் ஆப்ஷன் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பாடி கிராபிக்ஸ் ஆகியவை இந்த அப்டேட்டில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இந்த பைக்கின் வடிவமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tvs jupiter 110 launch

மேலும் இந்த ஸ்கூட்டர் குறித்து வெளியான டீசர்களில் இந்த ஸ்கூட்டர் இந்த செக்மெண்டிலேயே நீளமான ஸ்கூட்டராக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதன்படி இந்த ஸ்கூட்டரில் சுமார் 30 லிட்டர் அளவிற்கான சீட்டுக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜ் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இரண்டு ஹெல்மெட்டுகளை தாராளமாக உள்ளே வைத்து எடுத்து செல்லும் அளவுக்கு இட வசதி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் இருப்பது போலவே முன்பக்கம் எரிபொருளை நிரப்பும் கேப் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஸ்கூட்டரின் பாதுகாப்பு தன்மை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்0 இந்த ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்க் ஃப்ளோர் போர்டுக்கு அடியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஜுபிடர் ஸ்கூட்டரில் ஏற்கனவே இருக்கும் இன்ஜினில் எந்தவித மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கலாம். அதே 109.7 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 7.77 பிஎச்பி பவரையும் 8.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையாகி வரும் இந்த ஸ்கூட்டர் ரூபாய் 77 ஆயிரம் முதல் ரூபாய் 92 ஆயிரம் வரையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. புதிதாக வரப்போகும் அப்டேட்டில் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அம்சங்களில் அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இதற்காக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம்.

தற்போது உள்ள ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலஸ்கோபிக் போர்க்கும் பின்பக்கம் காயில் ஸ்ப்ரிங் ஹைட்ராலிக் டேம்பர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 12 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் சில அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம். எல்லாம் நாளை இந்த ஸ்கூட்டரின் அறிமுகத்தின் போது தான் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பர்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர் 110 ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப் போவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹோண்டா ஆக்டிவாக்கு சவாலாக இந்த ஸ்கூட்டரின் அப்டேட்டுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் இல்லாத பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 7:00 [IST]
English summary
Tvs jupiter 110 launch tomorrow full details here
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+