ஆக்டிவா ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் 2024 டிவிஎஸ் ஜூபிட்டர்... புதுசா என்னென்ன வசதிகள் வந்திருக்கு?
டிவிஎஸ் ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றம், தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் செயல்படுதிறன் என அனைத்திலும் டிவிஎஸ் ஜூபிட்டர் 110 ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. டிரம், டிரம் அலாய், டிரம் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் மற்றும் டிஸ்க் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.73,700இல் இருந்து ரூ.87,250 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. வேரியண்ட்களுக்கு ஏற்ப ஸ்கூட்டரில் டிரம் பிரேக் அல்லது டிஸ்க் பிரேக்கை பெறலாம்.
டாப் வேரியண்ட்களில் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் என்கிற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அட்வான்ஸ்டு கனெக்ட்டிவிட்டி வசதி கிடைக்கும். புதிய டிவிஎஸ் ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது நாங்கள் பெற்ற அனுபவங்களை விரிவான ரிவியூவாக தமிழில் வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் 110சிசி ஸ்கூட்டர்களுள் ஒன்றாக டிவிஎஸ் ஜூபிட்டர் 110 விளங்குகிறது. குறிப்பாக, விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளது. இத்தகைய டிவிஎஸ் ஸ்கூட்டரில் மிக முக்கிய அம்சமாக பெட்ரோல் நிரப்பும் பகுதி ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரை 6 விதமான கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

புதிய ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரில் 113.3சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஐகோ அசிஸ்ட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி மற்றும் 9.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். நகர்புற சாலைகளில் மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்வதற்கும், அதிக மைலேஜை பெறுவதற்கும் ஐகோ அசிஸ்ட் தொழிற்நுட்பம் உதவியாக இருக்கும் என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








