டிவிஎஸ் ஜுபிடர் 110 vs ஹோண்டா ஆக்டிவா vs ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ்.. மூன்றில் எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?..

டிவிஎஸ் (TVS) நிறுவனம் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியைக் கருத்தில் கொண்டு தன்னுடைய ஜுபிடர் 110 (Jupiter 110) ஸ்கூட்டர் மாடலை வேற லெவலுக்கு அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த அப்டேட்டினால் தற்போது ஜுபிடர் 110 அட்டகாசமான ஸ்கூட்டர் மாடலாக மாறியிருக்கின்றது. ஆமாங்க, அந்த அளவிற்கே சிறப்பு வசதிகளை சேர்த்தல் மற்றும் மாற்றங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை ஜுபிடர் 110-இல் டிவிஎஸ் செய்திருக்கின்றது. எனவே போட்டி ஸ்கூட்டர் மாடல்களைக் காட்டிலும் பலநிலைகளில் மேம்பட்ட தயாரிப்பாக புதிய ஜுபிடர் 110 மாறி இருக்கின்றது.

இத்தகைய ஸ்கூட்டரையே அதன் போட்டியாளர்களாக சந்தையில் விளங்கிக் கொண்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் (Hero Pleasure Plus) ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதுகுறித்த தகவலையே இங்கே வழங்கி இருக்கின்றோம். எஞ்சின் திறன் வெளிப்பாடு, எடை, உருவ அளவு, சஸ்பென்ஷன் செட்-அப், பிரேக், விலை உள்ளிட்டவற்றையே ஒப்பீடு செய்து அதுகுறித்த தகவலையே இங்கே வழங்கியுள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tvs jupiter 110 vs rivals

எஞ்சின் ஒப்பீடு: டிவிஎஸ் ஸ்கூட்டரே இதில் பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. இதில் 113.3 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 8.02 எச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்மில் 9.8 என்எம் டார்க் வரை வெளியேற்றும். ஆனால், இது போட்டி மாடல்களாக இருக்கும் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் ஆகியவை குறைவான திறனையே வெளியேற்றும்.

ஹோண்டா ஆக்டிவாவில் 109.51 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 7.84 எச்பி மற்றும் 8.9 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ்ஸில் 110.9 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.15 எச்பி மற்றும் 8.70 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும்.

Tvs jupiter helmet storage

எடை மற்றும் உருவ அளவின் ஒப்பீட்டு விபரங்கள்: டிவிஎஸ் ஜுபிடர் 110 ஸ்கூட்டரின் இருக்கை 770 மிமீ ஆகும். இதேபோல், கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீட்டரும், வீல்பேஸ் 1,275 மிமீட்டரையும் கொண்டிருக்கின்றது. இதைவிட குறைவான உருவ அளவையே ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் கொண்டிருக்கின்றது. மிகவும் சொற்பமான அளவிலேயே இவை குறைவாக இருக்கின்றன.

அதேவேளையில் பெட்ரோலை புதிய ஜுபிடரில் 5.1 லிட்டரும், ஆக்டிவாவில் 5.3 லிட்டரையும், பிளஷ்ஷர் பிளஸ்ஸில் 4.8 லிட்டரையும் நிரப்பிக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் மட்டும் ஜுபிடர் ஆக்டிவாவிடும் இருந்த லேசாக பின் தங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், எடை விஷயத்தில் ஜுபிடர் மற்றும் ஆக்டிவா இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. 105-106 கிலோவையே அவைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஹீரோ பிளஷ்ஷர் பிளஷ் 104-106கிலோவாக உள்ளது.

Tvs jupiter wheel

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் விபரம்: பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்த வரை ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக்கே வழங்கப்படுகின்றன. ஆனால், ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் ஸ்கூட்டரில் 130 மிமீட்டர் டிஸ்க்கும், 130 மிமீட்டர் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. சஸ்பென்ஷனை பொருத்த வரை ஜுபிடர் மற்றும் ஆக்டிவாவில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், பிளஷ்ஷர் பிளஸ்ஸில் பாட்டம் லிங்க் மற்றும் மோனோஷாக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

விலை விபரம்: டிவிஎஸ் ஜுபிடர் 110 ஸ்கூட்டரின் ஆரம்ப வேரியண்டின் விலை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 73,700 என்கிற குறைவான விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேளையில், ஹோண்டா ஆக்டிவா சந்தையில் ரூ. 76,684 தொடங்கி ரூ. 82,684 வரையிலும், ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் ஸ்கூட்டர் ரூ. 71,213 தொடங்கி ரூ. 83,113 வரையிலும் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வசதிகளைப் பொருத்த வரை நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வசதிகள் பல டிவிஎஸ் ஜுபிடர் 110-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், அட்வான்ஸ்டு வசதிகள் சிலவும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில், உங்களுக்கு பொருத்தமானதாக எது இருக்கும் என்பதை பார்த்து நீங்கள் உங்களுக்கான ஸ்கூட்டரை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2024, 19:00 [IST]
English summary
Tvs jupiter 110 vs rivals detailed specification comparison
மேலும்... #tvs motor #2024 TVS Jupiter 110 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X