டிவிஎஸ்-இன் சிஎன்ஜி டூ-வீலரும் ரெடி.. பஜாஜ் சிஎன்ஜி பைக்கைவிட அதிகம் மைலேஜ் தருமா? எதிர்பார்ப்பு எகிறுது!

இந்தியாவின் மற்றும் உலகின் முதல் சிஎன்ஜி (CNG)-யால் இயங்கும் பைக் மாடலை பஜாஜ் (Bajaj Auto) நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஃப்ரீடம் 125 (Freedom 125) மாடல்தான் அது. இந்த பைக் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும். இதற்காக இரண்டு வகையான கலன்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோலை 2 லிட்டர் வரையிலும், சிஎன்ஜி-யை இரண்டு கிலோ வரையிலும் சேமித்துக் கொள்கின்ற வகையிலான கலன்களே ஃப்ரீடம் 125 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையிலேயே இந்தியாவின் மற்றொரு முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் பஜாஜ்-க்கு போட்டியாக இந்திய சந்தையில் சிஎன்ஜி டூ-வீலரை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் வெளியாகி சில தினங்களே ஆகின்ற நிலையில் தற்போது டிவிஎஸ் நிறுவனத்தின் சிஎன்ஜியால் இரண்டு சக்கர வாகனம் சாலையோட்டத்தின் போது பொதுமக்களின் பார்வையில் சிக்கி இருக்கின்றது.

TVS jupiter cng testing starts

மேலும், அதுகுறித்த படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்களை வைத்து பார்க்கையில் டிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஜுபிடரை தழுவியே இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் முழுமையாக மறைப்புகளால் இந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனையோட்டத்திற்கு உட்படுத்தியதால் அந்த வாகனம் பற்றிய முழுமையான இங்கே விவரிக்க முடியவில்லை.

இருப்பினும் சில நம்ப தகுந்த தகவல்கள் இந்த ஸ்கூட்டர் பற்றி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கைப் போலவே டிவிஎஸ்-இன் முதல் சிஎன்ஜி டூ-வீலரும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டதாகவே தயார் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுதவிர, இந்த வாகனத்திலும் பெஸோ சான்று பெற்ற சிலிண்டரே இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதிக பாதுகாப்பான சிஎன்ஜி சிலிண்டரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதற்கான சான்றே இதுவாகும். டிவிஎஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் அடுத்த 3 முதல் 12 மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும், வரும் ஏதேனும் ஓர் பண்டிகை தினத்தில் இந்த வாகனத்தை டிவிஎஸ் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றும் கூறுகின்றனர். இது விற்பனைக்கு வரும்போது புதிய பெயரிலேயே விற்பனைக்கு வரும். இப்போது வரை சிஎன்ஜி ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் யு740 என்றே குறிப்பிட்டு வருகின்றது.

அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டராக இது விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் எனில் இதுவே உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டராக மாறும். இந்த இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியிலேயே தற்போது டிவிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற முன்னணி பிராண்டுகளும் இந்திய சந்தையில் சிஎன்ஜி டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திலேயே பஜாஜ் ஃப்ரீடம் 125 மட்டுமே சிஎன்ஜியால் இயங்கும் பைக்காக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் ஆரம்ப விலை ரூ. 95 ஆயிரம் மட்டுமே ஆகும். இப்போதைக்கு இந்தியாவிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே இந்த பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் நாடு முழுவதும் அது விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இந்தியாவைத் தொடர்ந்து ஆறு உலக நாடுகளிலும் இந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் பைக் மாடலாக ஃப்ரீடம் 125 காட்சியளிக்கின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 102 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேவேளையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும். இதற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே டிவிஎஸ் அதன் சிஎன்ஜி ஸ்கூட்டரை தயார் செய்துள்ளது.

குறிப்பு: இதில் வழங்கப்பட்டு இருக்கும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. டிவிஎஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் தெளிவாக இல்லாத காரணத்தினால் வழங்கப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 12:00 [IST]
English summary
Tvs jupiter cng scooter poised for festive season launch
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+