வெறும் ரூ2545 செலவுல இந்த ஸ்கூட்டரை வாங்கிடலாமா? இப்படி கணக்கு பண்ணா எல்லாம் சரியாக நடக்கும்!
ஸ்கூட்டர் வாங்கும் பலர் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிட்டர் ஸ்கூட்டரை வாங்க முடிவு செய்கிறார்கள். இந்த ஸ்கூட்டரில் குறைந்த விலை வேரியன்டான எஸ்எம்டபிள்யூ வேரியண்ட் ஸ்கூட்டரை நீங்கள் வெறும் ரூபாய் 10 ஆயிரம் முன்பனத்தில் மாதம் ரூபாய் 2545 செலவு செய்தால் ஸ்கூட்டரை சொந்தமாகி கொள்ள முடியும். இப்படி குறைவான பட்ஜெட்டில் எப்படி ஸ்கூட்டர் வாங்குவது என்ற கணக்கை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
இன்று டூவீலர் வாங்க நினைக்கும் பலர் ஸ்கூட்டரை ஒரு முக்கிய ஆப்ஷனாக தேர்வு செய்கிறார்கள். சுலபமாக பயணம் செய்வதற்கு இந்த ஸ்கூட்டர் உதவியாக இருக்கிறது. முக்கியமாக நகரத்திற்குள் பயணம் செய்ய இந்த ஸ்கூட்டர்கள் வசதியாக இருப்பதால், இந்த ஸ்கூட்டர்களை தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிட்டர் ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

அதில் குறைந்த விலை வேரியன்டாக எஸ்எம்டபிள்யூ என்ற வேரியண்ட் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரை நீங்கள் வெறும் ரூபாய் 10 ஆயிரம் முன்பணத்தில் மாதம் ரூபாய் 2545 இஎம்ஐ செலுத்தி உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விட முடியும். பலற்கும் இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் ஸ்கூட்டரை வாங்குவது எப்படி என்று குழப்பம் இருக்கலாம். அதற்கான விரிவான விபரம் தான் இது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிட்டர் எஸ்எம்டபிள்யூ வேரியண்ட் ஸ்கூட்டர் ரூபாய் 73,650 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த எக்ஸ் ஷோரூம் விலை போக கூடுதலாக ஆர்டிஓ செலவு, இன்சூரன்ஸ் செலவு இதுபோக மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து ஆன்ரோடு விலையாக ரூபாய் 88,310க்கு இது ஸ்கூட்டர் விற்பனையாகிறது.

நீங்கள் இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் நீங்கள் முன்பணமாக ரூபாய் 10,000 கொடுக்க வேண்டும். அப்படி என்றால் மீதமுள்ள ரூ78,310 உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இதற்கு மூன்று ஆண்டுக்கு கடன் பெற்று ஆண்டுக்கு 10.5 சதவீதம் வட்டி என கணக்கிட்டால் நீங்கள் வாங்கிய கடனுக்கு மாதம் ரூபாய் 2745 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.
இந்த மூன்று ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து இஎம்ஐ செலுத்தினால் மொத்தம் ரூபாய் 13,320-ஐ வட்டியாக மட்டும் செலுத்துவீர்கள். அதாவது நீங்கள் வாங்கிய ரூ78,310 கடனுக்கு ரூ13320 வட்டியாக செலுத்த வேண்டும். இவை எல்லாம் சேர்த்து மொத்தமாக கணக்கிட்டால் நீங்கள் முன்பணம் கொடுத்த ரூ10,000, வட்டியாக செலுத்தும் ரூ13,320 நீங்கள் வாங்கிய கடன் ரூபாய் 78,310 என கணக்கிட்டால் உங்களுக்கு ரூ1,01,630 ரூபாய் இந்த வாகனத்திற்கான மொத்த செலவாக இருக்கும்.

இதுவே நீங்கள் முன்பணமாக அனைத்து தொகையையும் கொடுத்து விட்டால் உங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உங்களுக்கு குறைவான விலையிலேயே வாகனம் வாங்கிக் கொள்ள முடியும். இன்று மிடில் கிளாஸ் மக்கள் பல சொந்தமாக ஒரு டூவீலர் வாங்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது சாத்தியமான ஸ்கூட்டராக இருக்கிறது.
இன்று மார்க்கெட்டில் இதைவிட குறைந்த விலை வாகனங்கள் எல்லாம் விற்பனையானாலும், மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பார்க்கும்போது குறைந்த விலை வாகனமாக இது இருக்கிறது. இதனால் இந்த வாகனத்தை மக்கள் விரும்பி வாங்கும் போது மக்களின் அடிப்படையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிறது. எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இந்த வாகனத்தை அவர்கள் பயன்படுத்த முடியும்.
இந்த கடன் தொகையை நீங்கள் பெற நீங்கள் அருகில் உள்ள ஷோரூமுக்கோ அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கோ சென்று உங்களுக்கான கடன் வாங்கும் தகுதியை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கடன் வாங்கும் தகுதி மாறுபடும் என்பதால் இந்தத் தொகை உங்களுக்கு கடனாக பெற வங்கிகள் ஒப்புக் கொள்ளுமா என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பர்க் கருத்து: டூவீலர் வாங்கும் போது நீங்கள் லோன் மூலம் அதை வாங்குகிறீர்கள் என்றால் ஒன்றுக்கு இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து வட்டி விகிதம் குறித்து சரியாக கணக்கிடுங்கள். இல்லை என்றால் நீங்கள் அதிக தொகையை இழக்க நேரிடும். தற்போது 10.5 மற்றும் அதற்கு குறைவான வட்டி விகிதத்தில் கூட வாகனங்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









