ஆக்டிவாவின் மிக பெரிய எதிரி என்பதை டிவிஎஸ் ஜுபிடர் நிரூபிச்சிருக்கு.. இப்படி ஒரு அடி கொடுக்கும்னு எதிர்பாக்கல!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான ஸ்கூட்டர் மாடல்களில் ஜுபிடர் (TVS Jupiter)-ம் ஒன்றாகும். இது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)-வுக்கு மிக சிறந்த போட்டியாளனாக நாட்டில் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரே தற்போது விற்பனையில் மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் வாயிலாக தான் ஒரு ஆக்டிவாவிற்கான கை தேர்ந்த போட்டியாளன் என்பதை ஜுபிடர் மீண்டும் உறுதி செய்திருக்கின்றது. இந்தியாவில் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் 110 சிசி மற்றும் 125 சிசி ஆகிய பிரிவுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டிவிஎஸ் ஜுபிடர் விற்பனையில் 64 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TVS jupiter sales

இதன் வாயிலாக நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலும் ஜுபிடர்-தான் என்பது உறுதியாகி இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டிவிஎஸ் ஜுபிடர் சந்தையில் விற்பனையில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு மிக சிறந்த நிதியாண்டாக கடந்த 2023-24 ஆம் நிதியாண்டே அமைந்திருக்கின்றது.

ஏனெனில் இந்த நிதியாண்டில் இதற்கு முன்பு எந்த ஒரு நிதியாண்டிலும் இல்லாத அளவில் மிக அதிக எண்ணிக்கையில் ஜுபிடர் ஸ்கூட்டர் விற்பனையாகி இருக்கின்றது. 8 லட்சத்து 44 ஆயிரத்து 863 யூனிட்டுகள் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் சென்ற ஆண்டில் விற்பனையாகி இருக்கின்றன.

அதேவேளையில், ஒட்டுமொத்தமாக இந்த பத்து ஆண்டுகளில் (2014 தொடங்கி 2024 நிதியாண்டு இறுதி வரை) 64 லட்சத்து 39 ஆயிரத்து 567 யூனிட்டுகள் வரை ஜுபிடர் விற்பனையாகி இருக்கின்றன. இது நிறுவனத்தின் ஒரு கோடி யூனிட் வாகன விற்பனையில் 63 சதவீதம் ஆகும்.

ஆமாங்க, கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 670 யூனிட்டுகள் வரை வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. நிறுவனம் அதிகம் விற்பனையாகும் இரண்டு சக்கர வாகனமாக கண்டறியப்பட்டு இருக்கும் டிவிஎஸ் ஜுபிடரின் ஆரம்ப விலை ரூ. 78,718 ஆகும்.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 93,773 ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஜுபிடர் 125 மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 90,255 ஆகும். அதிகபட்ச விலை ரூ. 99,905 ஆகும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கூட்டரின் திரையிலேயே காணும் வசதி, குரல் வாயிலாக அசிஸ்ட் செய்யும் வசதி, நேவிகேஷன், எரிபொருளை சிக்கனம் செய்யும் வசதி உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் 110 சிசி தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 5.8 கிலோவாட் ஆற்றலையும், 8.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதேபோல், இதன் 125 சிசி தேர்வு அதிகபட்சமாக 6.0 kW பவரையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். சற்று பவர்ஃபுல்லான ஆப்ஷனாக ஜுபிடர் 125 இருக்கின்றது. இதுவும் இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே டிவிஎஸ் ஜுபிடரின் சேல்ஸ் விபரம் அமைந்திருக்கின்றது. அடுத்தடுத்து வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் பல்வேறு சாதனைகளை டிவிஎஸ் ஜுபிடர் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2024, 5:00 [IST]
English summary
Tvs jupiter scooter sales reaches 8 lakh units in last fy24
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+