ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து எல்லாரும் வாங்க விரும்பும் ஸ்கூட்டர்!! நம்ம தமிழ்நாட்டில் உற்பத்தியாகுது...

டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்று. ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஜூபிட்டர் ஆகும். வருகிற செப்டம்பர் மாதம் வந்தால், விற்பனைக்குவந்து 11 வருடங்களை ஜூபிட்டர் நிறைவு செய்கிறது. 110சிசி மற்றும் 125சிசி-களில் இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் 110சிசி ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்டு வந்த ஜூபிட்டர் 2021ஆம் ஆண்டில் 125சிசி என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.

110சிசி, 125சிசி என மொத்தமாக கடந்த 11 வருடங்களில் 67 லட்சத்து 39,254 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் வரையில், அந்த ஒரு வருடத்தில் மட்டும் 8 லட்சத்து 44,863 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையில் இதுதான் அதிகமாகும்.

tvs jupiter celebrate 11th anniversary

முன்னதாக, 2017 ஏப்ரல் - 2018 மார்ச் வரையில் 8 லட்சத்து 10,916 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் 2-வீலராக ஜூபிட்டர் ஸ்கூட்டர் விளங்குகிறது. ஜூபிட்டருக்கு அடுத்து 2023 ஏப்ரல் - 2024 மார்ச்சில் எக்ஸ்.எல் மொபெட் பைக்குகளை டிவிஎஸ் அதிகமாக விற்பனை செய்துள்ளது. அந்த 1 வருடத்தில் 4 லட்சத்து 81,803 எக்ஸ்.எல் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கடுத்து அதிகமாக, 4 லட்சத்து 78,443 ரைடர் 125 பைக்குகளையும், 3 லட்சத்து 78,112 அப்பாச்சி பைக்குகளையும், 3 லட்சத்து 31,865 எண்டார்க் 125 ஸ்கூட்டர்களையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த 1 வருடத்தில் விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் வெற்றிக்கு ஜூபிட்டர் மிக முக்கியமானதாக விளங்குகிறது. 2013ஆம் ஆண்டில் ஜூபிட்டர் அறிமுகம் செய்யப்பட்ட பின், இந்திய ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டாரின் பங்கு அதிகரிக்க துவங்கியது.

tvs jupiter celebrate 11th anniversary

ஜூபிட்டர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே வருடத்தில் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டாரின் பங்களிப்பு 12.68%-இல் இருந்து 15.19% ஆக அதிகரித்தது. அதாவது, 100இல் 12.68 பேர் டிவிஎஸ் ஸ்கூட்டரை வாங்கிவந்த நிலையில், ஒரே வருடத்தில் இந்த சதவீதம் ஆனது 15.19% ஆக அதிகரித்தது. அதன்பின், 2018ஆம் ஆண்டில் இது 16.36% ஆக அதிகரித்தது. ஜூபிட்டரின் வெற்றியை கண்டதை அடுத்து, டிவிஎஸ் நிறுவனம் எண்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

எண்டார்க்கின் அறிமுகத்திற்கு பின், இந்தியாவில் ஸ்கூட்டரை வாங்கும் 4இல் ஒருவர் நிச்சயமாக டிவிஎஸ் ஸ்கூட்டரை வாங்கும் சூழல் உருவாகியது. 2013இல் அறிமுகம் செய்யப்பட்ட ஜூபிட்டர், அடுத்த 2 வருடங்களில் 5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. அதற்கடுத்த 5 லட்சம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் அடுத்த 1 வருடத்தில் விற்பனை செய்யப்பட்டன. அதற்கடுத்த 1 வருடத்தில் மேலும் 10 இலட்சம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன.

tvs jupiter celebrate 11th anniversary

இவ்வாறு, வருடத்திற்கு வருடம் ஜூபிட்டரின் விற்பனை எண்ணிக்கை அசூர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. 40 இலட்சம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை என்கிற மைல்கல்லை கடந்த 2020ஆம் ஆண்டின் மத்தியில் டிவிஎஸ் நிறுவனம் கடந்தது. 50 இலட்சம் மைல்கல்லை 2022ஆம் ஆண்டில் கடந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இதனை கொண்டாடும் வகையில் ஜூபிட்டர் 110 கிளாசிக் ஸ்கூட்டரை அந்த சமயத்தில் அறிமுகம் செய்தது நினைவுக்கூரத்தக்கது.

60 இலட்சம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டிவிஎஸ் கடந்தது. இந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையில் இந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 3 லட்சம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2024 ஜூலை மாதம் வரையில் மொத்தம் 1 கோடியே 8 இலட்சம் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது. இதில், பாதிக்கும் மேல் 67 இலட்சம் ஸ்கூட்டர்கள் ஜூபிட்டர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கூட்டராக ஜூபிட்டர் உள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டரின் இந்த வெற்றிக்கு காரணம், அதன் எளிமையான உடலமைப்பு ஆகும். மேம்படுத்தப்பட்ட 2024 டிவிஎஸ் ஜூபிட்டர் 110 ஸ்கூட்டர் சமீபத்தில்தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 25, 2024, 8:00 [IST]
English summary
Tvs jupiter scooter will celebrate 11th anniversary in september 2024
மேலும்... #tvs motor #jupiter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X