டிவிஎஸ் ரைடர் பைக்கில் ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் அறிமுகம்.. இது என்ன பண்ணும் தெரியுமா?..

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல்களில் ரைடர் (Raider)-ம் ஒன்றாகும். மேலும், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான 125 சிசி பைக் (125 CC Bike) மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த பைக் மாடலிலேயே டிவிஎஸ் நிறுவனம் தற்போது ஓர் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த புதிய தேர்வு ரைடர் ஐகோ (iGO Assist) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 98,389 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிவிஎஸ் ரைடர் பைக் மாடலுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்திலேயே அது ஒரு மில்லியன் விற்பனை எனும் சாதனையை எட்டியது. இத்தகைய பைக் மாடலுக்கு புகழாரம் சூட்டும் விதமாகவே டிவிஎஸ் நிறுவனம் ரைடர்-இல் தற்போது ஐ-கோ அசிஸ்ட் எனும் அம்சத்தைச் சேர்த்து இருக்கின்றது.

Tvs launched raider igo fastest 125cc motorcycle

125 சிசி பைக் பிரிவில் இந்த அம்சத்தை பெறும் முதல் பைக் மாடல் இதுவே ஆகும். இது ஓர் பூஸ்ட் மோட் ஆகும். ஆமாங்க, இந்த மோட் வாயிலாக பைக்கில் அதீத ஆற்றல் வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, இந்த அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் ரைடர் ஐ-கோ தேர்வை கூடுதல் கவர்ச்சியானதாகக் காண்பிக்கும் பொருட்டு டிவிஎஸ் நிறுவனம் புதிய நிற தேர்வையும் அறிமுகம் செய்திருக்கின்றது.

நார்டோ கிரே (Nardo Grey) எனும் நிற தேர்வையே அறிமுகம் செய்திருக்கின்றனர். தொடர்ந்து, இதன் வீல்களுக்கு முரண்பாடான நிறத்தை வழங்கும் பொருட்டு அதன் அலாய் வீல்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த ஐ-கோ தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கு் ரைடர் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 11.75 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.

இது வழக்கமான டிவிஎஸ் ரைடரைக் காட்டிலும் 0.55 என்எம் கூடுதல் ஆகும். இதுமட்டுமில்லைங்க, இதனால் வெறும் 5.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஐ-கோ மோடை ஆக்டிவேட் செய்யும்பட்சத்திலேயே இந்த திறனை நம்மால் எட்ட முடியும்.

ஆற்றலை உருவாக்குவதில் மட்டுமல்ல எரிபொருள் சிக்கனத்திலும் தலை சிறந்த வாகனமாக இது இருக்கும். அந்தவகையில், 10 சதவீதம் வரையில் இது எரிபொருளை சிக்கனப்படுத்தும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 124.8 சிசி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 11.2 எச்பி வரை வெளியேற்றும். மேலும், எல்சிடி இணைப்பு வசதிக் கொண்ட கிளஸ்டர் (LCD Connected Cluster)-ம் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 85-க்கும் மேற்பட்ட இணைப்பு வசதிகளை இந்த பைக்கில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் விதமாக லோ-ஃப்ரிக்சன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், கேஸ் சார்ஜட் 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோ-ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ப்ளூடூத் இணைப்பு, வாய்ஸ் அசிஸ்டன்ஸ், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், செல்போனுக்கு வரும் தகவல்களை பெறும் வசதி உள்ளிட்டவையும் டிவிஎஸ் ரைடரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றம் கொண்ட டூ-வீலர்களில் ரைடர்-ம் ஒன்றாகும். இந்த பைக் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை மேலும் இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது ரைடர் ஐ-கோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2024, 13:23 [IST]
English summary
Tvs launched raider igo at rs 98389 claiming it the fastest 125 cc motorcycle
மேலும்... #tvs motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+