பல்சர் பைக்குக்கு பதிலா எல்லாரும் டிவிஎஸ் பக்கம் வந்துடுறாங்க!! சேல்ஸ் ரிப்போர்ட் வெளிச்சம் போட்டு காட்டுது!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), நம் தமிழ்நாட்டை சேர்ந்த, ஓசூரில் தொழிற்சாலையை கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவின் 3வது பெரிய 2-வீலர் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 13 விதமான 2-வீலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பைக்குகளும் உள்ளன; ஸ்கூட்டர்களும் உள்ளன.

tvs motor sales report

டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தமாக 3 லட்சத்து 1,449 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 2 லட்சத்து 32,956 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனை ஆனது 29.40%, அதாவது 68,493 வாகனங்கள் அதிகரித்துள்ளது.

வழக்கம்போல், டிவிஎஸ் மோட்டாரில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக ஜூபிட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜூபிட்டர் தான் முதலிடம் வகித்தது இருப்பினும், அந்த மாதத்தில் 17,503 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2023 ஏப்ரலில் 59,583 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 77,086 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.

tvs motor sales report

டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனையில் 4இல் ஒரு பங்கு ஜூபிட்டர் ஸ்கூட்டர்களாகும். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக டிவிஎஸ் ஜூபிட்டர் விளங்குகிறது. இந்த வரிசையில் இதற்கடுத்து, டிவிஎஸ் ரைடர் பைக் 2வது இடத்தை பிடித்துள்ளது. 125சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் ரைடர் பைக்குகளின் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதாவது, அந்த அளவிற்கு சமீப காலங்களில் நிறைய பேர் டிவிஎஸ் ரைடர் பைக்குகளை வாங்க ஆரம்பித்துள்ளனர். இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், 2023 ஏப்ரலில் 31,491 ரைடர் பைக்குகளை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 51,098 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 20 ஆயிரம் ரைடர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

tvs motor sales report

ரைடர் பைக்குகளை போன்று டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விற்பனையும் கடந்த சில மாதங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 45,520 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரலில் இதனை காட்டிலும் 7,372 பைக்குகள் குறைவாக 38,148 அப்பாச்சி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 160சிசி-இல் இருந்து 200சிசி வரையிலான அப்பாச்சி பைக்குகள் மட்டுமே இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 310சிசி சேர்க்கப்படவில்லை.

டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்குகளின் விற்பனையும் சிறப்பாகவே உள்ளது. இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ள எக்ஸ்.எல் கடந்த ஏப்ரலில் 41,924 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 5வது இடத்தில் எண்டார்க் ஸ்கூட்டர் 30,411 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இந்த லிஸ்ட்டில் 6வது மற்றும் 7வது இடங்களில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஸ்போர்ட் பைக் முறையே 16,713 யூனிட்கள் மற்றும் 15,699 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ரேடியான் (12,316), ஸெஸ்ட் (8,129) மற்றும் ரோனின் (2,130) உள்ளன.

tvs motor sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், 422 அப்பாச்சி 310 பைக்குகள், 1 ஸ்டார் சிட்டி பைக்கையும் கடந்த மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பெப்+ ஸ்கூட்டர் ஒன்று கூட விற்பனையாகவில்லை. டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் ஒருபக்கம் அதிகமாக விற்பனையாகி கொண்டிருந்தாலும், அதற்கு இணையாக ரைடர் பைக்குகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 17:16 [IST]
English summary
Tvs motor 2 wheeler sales report april 2024 check all details here
மேலும்... #tvs #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X