டிவிஎஸ் மோட்டார் ஒரு டைம்ல எப்படி இருந்துச்சு! மேட்-இன்-தமிழ்நாடு வாகனங்களுக்கு வரவேற்பு... இப்போ 80 நாடுகளில்

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் பிரான்ஸ் நாட்டிலும் தனது வாகனங்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான தனது தயாரிப்புகளையும் டிவிஎஸ் நிறுவனம் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இது உலகின் 4வது பெரிய 2-வீலர் & 3-வீலர் உற்பத்தி நிறுவனம் ஆகும். தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலையை கொண்டுள்ள டிவிஎஸ் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தனது உற்பத்தி வாகனங்களை விற்பனை செய்கிறது.

tvs motor company in france

மொத்தம் 80 நாடுகளில் டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் டிவிஎஸ் வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே, ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்களையும் உலகளவில் விற்பனை செய்யும் டிவிஎஸ் மோட்டார் அதன் உற்பத்தி வாகனங்களை ஐரோப்பாவில் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தி உள்ளது. ஐரோப்பாவில், பிரான்ஸ் நாட்டின் லயன் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் டிவிஎஸ் அதன் வாகனங்களையும், ரைடிங் ஜாக்கெட் போன்ற ஆக்ஸஸரீகளையும் பார்வையாளர்களின் காட்சிக்கு வைத்துள்ளது.

tvs motor company in france

மார்ச் 8ஆம் தேதி துவங்கிய ஐரோப்பாவின் முக்கியமான ஆட்டோ கண்காட்சிகளுள் ஒன்றான இது மார்ச் 10ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. வாகனங்களை காட்சிப்படுத்தியதுடன், பிரான்ஸ் நாட்டில் தனது வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, சேல்ஸ் நெட்வொர்க்கை பிரான்ஸ் நாட்டிற்கும் விரிவுப்படுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இமில் ஃப்ரே என்கிற நிறுவனத்துடன் டிவிஎஸ் நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. இமில் ஃப்ரே ஆனது ஐரோப்பாவில் கடந்த 100 வருடங்களாக பெரிய விநியோக நெட்வொர்க் உடன் செயல்படுகிறது. பிரான்ஸில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள டிவிஎஸ் பைக்குகளாவன அப்பாச்சி ஆர்.ஆர்310, அப்பாச்சி ஆர்டிஆர்310 மற்றும் டிவிஎஸ் ரோனின் ஆகும்.

tvs motor company in france

இவற்றுடன், டிவிஎஸ் ஐக்யூப் எஸ், எக்ஸ் மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் செயல்திறன்மிக்க ஸ்கூட்டரான எண்டார்க்கும் இந்த கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த டிவிஎஸ் 2-வீலர்களுக்கு ஐரோப்பாவில் அனுமதி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் டிவிஎஸ் மோட்டாரின் வாகனங்களை காண இந்த கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் திட்டம் வகுத்தல் பிரிவு தலைவர் ஷரத் மோகன் மிஷ்ரா, "கண்காட்சியில் எங்களது பங்கேற்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இந்த மதிப்புமிக்க நிகழ்வில் ஆர்வலர்களுடன் ஈடுபடுவது பிரான்சில் எங்களின் பார்வையை மேம்படுத்துகிறது. பங்கேற்பாளர்களை நாங்கள் எங்கள் பெவிலியனை கண்டுகளிக்க அழைக்கிறோம் மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் பொறியியல், தரம் மற்றும் வடிவமைப்பு திறனை காண அழைக்கிறோம்" என்றார்.

tvs motor company in france

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தை போன்று, டிவிஎஸ் மோட்டாரும் புது, புது வெளிநாடுகளில் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இதன்படி, அடுத்ததாக பிரான்ஸ் நாட்டிற்கு நெட்வொர்க்கை விரிவுப்படுத்துகிறது. இதன் மூலம், இந்திய தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் கிடைத்துவரும் வரவேற்பை அறியலாம். பிரான்ஸ் நாட்டு சாலைகளில் டிவிஎஸ் வாகனங்களை காண ஆர்வமாக உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2024, 12:38 [IST]
English summary
Tvs motor announced its presence in france check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X