டிவிஎஸ் மோட்டாரால் தமிழ்நாட்டுக்கே பெருமை - ஒரே மாதத்தில் வாகனங்களை விற்று தள்ளியிருக்கு!

இந்தியாவில் எத்தனை கார் நிறுவனங்கள் புதுசு, புதுசாக வந்தாலும் நம் நாட்டில் 2-வீலர்களை வாங்கவே நிறைய கஸ்டமர்கள் உள்ளனர். ஏனெனில், நம் நாட்டு போக்குவரத்துக்கு கார்களை காட்டிலும் 2-வீலர்களே ஏற்றவையாக விளங்குகின்றன. இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார் ஆகும். நம் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் 2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்களையும் விற்பனை செய்கிறது. டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த 2024 மே மாதத்தில் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் துறையில் நமது சென்னையின் பெயரை வலுவாக பதித்த நிறுவனங்களுள் முதன்மையானது டிவிஎஸ் மோட்டார் ஆகும். ஓசூரில் தொழிற்சாலையை கொண்டிருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைமையகமாக சென்னை விளங்குகிறது. வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கு சென்னை ஏற்ற பகுதியாக விளங்குவதால், இந்த நகரத்தில் டிவிஎஸ் மோட்டார் தனது தலைமையகத்தை கொண்டுள்ளது.

tvs motor vehicles sales report

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம், கடந்த 2024 மே மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 69,914 வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் அடங்குகின்றன. அதேபோல், டிவிஎஸ் மோட்டாரின் 2-வீலர்கள் மட்டுமின்றி 3-வீலர்களும் இதில் அடங்குகின்றன.

3-வீலர்களை விற்பனை செய்தாலும், அவை டிவிஎஸ் மோட்டாரின் மொத்த உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையில் வெறும் 3 சதவீதம் கூட கிடையாது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 10,324 மூன்று சக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 1,808 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 8,516 ஆகும்.

tvs motor vehicles sales report

அதாவது, டிவிஎஸ் உற்பத்தி செய்யும் குறைவான 3-வீலர்களிலும் பெரும்பான்மையானவை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டிவிஎஸ் மோட்டாரின் 2-வீலர்கள் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த மே மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 59,590 இரு சக்கர வாகனங்கள் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 மே மாதத்தில் 3 லட்சத்து 74,592 டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த 2024 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 3 லட்சத்து 59,590 டிவிஎஸ் 2-வீலர்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 2 லட்சத்து 71,140 ஆகும். ஆனால், 2023 மே மாதத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான 2-வீலர்களை இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கை 88,450 ஆகும்.

tvs motor vehicles sales report

ஆனால், 2023 மே மாதத்தில் 73,143 இருசக்கர வாகனங்களை மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்து டிவிஎஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. டிவிஎஸ் மோட்டாரில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் டிவிஎஸ் 2-வீலர்கள் என்று பார்த்தால், அது பைக்குகள் ஆகும். கடந்த மே மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 73,627 டிவிஎஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இதனை காட்டிலும் 11,379 பைக்குகள் குறைவாக 1 லட்சத்து 62,248 பைக்குகளை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. பைக்குகளுக்கு இணையாக, கடந்த மாதத்தில் 1 லட்சத்து 45,305 ஸ்கூட்டர்கள் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2023 மே மாதத்தை காட்டிலும் 24,149 அதிகமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, கடந்த மே மாதத்தில் 18,674 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 40,658 மொபெட்களையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோவை போன்று, டிவிஎஸ் மோட்டார் ஆனது வெளிநாட்டு ஏற்றுமதியை சார்ந்திருக்கும் நிறுவனம் கிடையாது. ஜூபிட்டர் போன்ற இந்தியாவில் அதிகம் பேர் வாங்கும் ஸ்கூட்டர்கள் இருப்பினும், டிவிஎஸ் மோட்டாரில் இருந்து பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது சற்று ஆச்சிரியத்தை தருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2024, 6:00 [IST]
English summary
Tvs motor company vehicles sales report 2024 may check all details here
மேலும்... #tvs motor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X