டிவிஎஸ் நிறுவனம் ஆரம்பிச்ச இத்தனை வருஷத்தில் இதுதான் முதல்முறை!! தமிழ்நாட்டு நிறுவனமாக ஜெயிச்சிடுச்சு...

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும், 3-சக்கர வாகனங்களையும் விற்பனை செய்கிறது. தமிழ்நாட்டின் ஒசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இத்தகைய முன்னணி தமிழக ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை நிலவரம் எப்படி இருந்தது? என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவின் 3வது மிகப்பெரும் 2-வீலர் பிராண்டாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. ஏற்கனவே கூறியதுபோல், 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்களையும் டிவிஎஸ் மோட்டார் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட ஆட்டோமொபைல் நிறுவனம் நடந்து முடிந்த 2024 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 71,792 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

tvs registers highest ever sales

இதுவரையில் ஒரு மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்த மாதமாக கடந்த 2024 செப்டம்பர் விளங்குகிறது. 2023 செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது 22% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 3 லட்சத்து 86,955 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 4 லட்சத்து 71,792 வாகனங்களில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பைக்குகள், ஸ்கூட்டர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் 3-சக்கர வாகனங்கள் என அனைத்தும் அடங்குகின்றன.

மேலும் இந்த எண்ணிக்கையில், கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்களின் எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால், 3 லட்சத்து 69,138 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3 லட்சத்து 493 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது.

tvs registers highest ever sales

கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் பைக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 29,268 ஆகும். 2023 செப்டம்பரில் 1 லட்சத்து 86,438 பைக்குகளை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் டிவிஎஸ் பைக்குகளின் விற்பனை ஆனது 23% அதிகரித்துள்ளது. அதேபோல், டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையும் 20% அதிகரித்துள்ளது.

2023 செப்டம்பரில் 1 லட்சத்து 55,526 ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 1 லட்சத்து 86,751 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில், ஐக்யூப் என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இவற்றின் விற்பனை 2023 செப்டம்பரை காட்டிலும் 42% அதிகரித்துள்ளது.

tvs registers highest ever sales

2023 செப்டம்பரில் 20,356 எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 28,901 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் எலக்ட்ரிக் 3-வீலர்களும் அடங்குகின்றன. டிவிஎஸ் 3-வீலர்களை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால், கடந்த மாதத்தில் மொத்தம் 15,598 மூன்று சக்கர வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.

அதுவே, 2023 செப்டம்பரில் 10,703 மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. ஏற்கனவே கூறியதுபோல், உள்நாட்டு விற்பனை அளவிற்கு இல்லையென்றாலும் வெளிநாட்டு ஏற்றுமதிகளிலும் டிவிஎஸ் நிறுவனம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இதற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை தான் சாட்சியாகும். 2023 செப்டம்பரில் 1 லட்சத்து 294 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த டிவிஎஸ், கடந்த செப்டம்பரில் 1 லட்சத்து 11,007 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு டிவிஎஸ் மோட்டாரின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சீராக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை வெகுவாக அதிகரித்து வருவது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு பெரிய உந்துதலாக இருக்கும். இதனால், வரும் மாதங்களில் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து நிறைய எலக்ட்ரிக் வாகனங்களை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 8:00 [IST]
English summary
Tvs motor registers highest ever monthly sales in september 2024 check all details here
மேலும்... #tvs motor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X