டிவிஎஸ் ஸ்டார் சிட்டியை வாங்க ஆள் இல்லை... ஒரு காலத்தில் எப்படியிருந்த பைக்!! ஜூனில் எத்தனை விற்பனை தெரியுமா?
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), நம் தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம் என்பதில் சந்தேகமே இல்லை. ஓசூரில் தொழிற்சாலையை கொண்டுள்ள டிவிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்கிறது. இப்படிப்பட்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த 2024 ஜூன் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை காட்டிலும் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதையும், டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்கள் குறித்த விபரங்களையும் இனி பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்திற்கு அடுத்து இந்தியாவின் 3வது பெரிய 2-வீலர் நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. கடந்த 2024 ஜூன் மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 55,723 இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்த 2-வீலர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 35,833 மட்டுமே ஆகும். இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை ஆனது 8.43%, அதாவது 19,890 அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 2024 மே மாதத்த்தில் 2 லட்சத்து 71,680 இரு சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. அதாவது, மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 15,957 டிவிஎஸ் 2-வீலர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக வழக்கம்போல் முதலிடத்தை ஜூபிட்டர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 72,100 ஆகும். ஆனால், கடந்த ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 64,252 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 7,848 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் 75,838 ஜூபிட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஜூபிட்டருக்கு அடுத்து 2வது இடத்தில், டிவிஎஸ் எக்ஸ்.எல் உள்ளது. கடந்த மாதத்தில் 40,397 எக்ஸ்.எல் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், 2023 ஜூன் மாதத்தில் 34,499 எக்ஸ்.எல் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி பிடித்துள்ளது. 37,162 அப்பாச்சி பைக்குகள் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூனில் 28,127 அப்பாச்சி பைக்குகளை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், 9,035 அப்பாச்சி பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

4வது இடத்தில் டிவிஎஸ் ரைடர் உள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு மக்கள் அதிகமாக வாங்கும் பைக்காக உருவெடுத்துவரும் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் டிவிஎஸ் ரைடரின் கடந்த மாத விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 29,850 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூன் மாதத்தை காட்டிலும் இது 4,459 ரைடர் பைக்குகள் குறைவாகும். கடந்த மே மாதத்திலும் 37,906 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ரைடர் பைக்குகளுக்கு அடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் அதிகமாக 27,812 எண்டார்க் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது. 6வது இடத்தில் டிவிஎஸ் மோட்டாரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் 15,210 யூனிட்கள் விற்பனை உடனும், 7வது இடத்தில் ஸ்போர்ட் பைக் 11,619 யூனிட்கள் விற்பனை உடனும் உள்ளன. 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ரேடியான் (10,274), ஸெஸ்ட் (8,779) மற்றும் ரோனின் (1,814) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல் 417 ஸ்டார் சிட்டி பைக்குகள், 235 அப்பாசி 310 பைக்குகளையும் டிவிஎஸ் மோட்டார் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துவருவது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஆறுதலை தந்தாலும், ரைடர் பைக்கின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் குறைந்திருப்பது சற்று கவலையளிக்கக்கூடியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









