டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!

நம் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் கடந்த 2024 மார்ச் மாதத்தில் விற்பனை செய்த இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் உடன் அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா நிறுவனங்களுக்கு அடுத்து, இந்தியாவின் 3வது பெரிய 2-வீலர் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. 2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்களையும் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தி செய்துகிறது. ஆனால், நாம் இந்த செய்தியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்களின் எண்ணிக்கையை மட்டுமே பார்க்க போகிறோம்.

tvs motor two wheeler sales

டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக வழக்கம்போல் கடந்த 2024 மார்ச் மாதத்திலும் ஜூபிட்டர் ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 71,390 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 மார்ச் மாதத்தில் வெறும் 58,874 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், இந்தியாவில் அதிகம் வாங்கப்படும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக விளங்கும் டிவிஎஸ் ஜூபிட்டரின் விற்பனை எண்ணிக்கை ஆனது 21.26%, அதாவது 12,516 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் மொத்தமாக 2 லட்சத்து 60,532 இரு சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், 71,390 வாகனங்கள் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் ஆகும்.

tvs motor two wheeler sales

2023 மார்ச் மாதத்தில் 2 லட்சத்து 40,780 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை ஆனது 8.20% அதிகரித்துள்ளது. அதாவது, 19,752 டிவிஎஸ் 2-வீலர்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜூபிட்டருக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலராக 2வது இடத்தில் எக்ஸ்.எல் பைக் உள்ளது.

டிவிஎஸ் மோட்டாரின் மினி பைக்காக விளங்கும் எக்ஸ்.எல் கடந்த மார்ச் மாதத்தில் 40,867 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 4,053 பைக்குகள் குறைவாக, 36,814 எக்ஸ்.எல் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தை டிவிஎஸ் ரைடர் பைக் பெற்றுள்ளது.

tvs motor two wheeler sales

இந்தியாவில் தற்சமயம் வெகுவாக கஸ்டமர்களை கவர்ந்துவரும் மோட்டார்சைக்கிளாக விளங்கும் டிவிஎஸ் ரைடர் கடந்த மார்ச் மாதத்தில் 38,026 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 31,002 ரைடர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரைடர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கடுத்து, 4வது மற்றும் 5வது இடங்களில் அப்பாச்சி பைக்குகளும், எண்டார்க் ஸ்கூட்டரும் உள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 34,237 அப்பாச்சி பைக்குகளும், 26,912 எண்டார்க் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 5 இடங்களில் ஐக்யூப் (14,326), ஸ்போர்ட் (11,934), ரேடியான் (11,232), ஜெஸ்ட் (9,239) மற்றும் ரோனின் (1,911) உள்ளன.

tvs motor two wheeler sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டு விற்பனையை போலவே, டிவிஎஸ் மோட்டாரின் வெளிநாட்டு ஏற்றுமதியும் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், டிவிஎஸ் ரைடர் ஆகும். டிவிஎஸ் நிறுவனம் சமீப ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய தரமான பைக்காக ரைடர் பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என இரண்டிலும் டிவிஎஸ் நிறுவனத்துக்கு பெரிய நம்பிக்கையாக ரைடர் மோட்டார்சைக்கிள் உருவெடுக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2024, 23:59 [IST]
English summary
Tvs motor two wheelers sales report of 2024 march check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X