ஆக்டிவாவிற்கு இன்னும் ஸ்ட்ராங்கான போட்டி வருது.. கருப்பு நிற காதலர்களை வளச்சு போட டிவிஎஸ் பிளான்!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று என்டார்க் (NTorq) ஆகும். ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125), சுஸுகி அக்செஸ் 125 (Suzuki Access 125) மற்றும் யமஹா ஃபஸ்ஸினோ (Yamaha Fascino) உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு மிகப் பெரிய போட்டியாக டிவிஎஸ்-இன் இந்த தயாரிப்பு விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் ஓர் முயற்சியாக அதில் சிறப்பு பதிப்பு தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளாக் எடிசன் (Black Edition)-யையே இந்த மாடலிலும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இது சந்தையில் டிவிஎஸ் என்டார்க் பிளாக் எடிசன் (TVS NTorq Black Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. பெயருக்கு ஏற்ப முழுக்க முழுக்க இந்த டூ-வீலர் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

TVS ntorq black edition

இந்த நிலையிலேயே, டிவிஎஸ் என்டார்க் பிளாக் எடிசன்-இன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் ஓர் டீசர் (teaser) படத்தை வெளியிட்டு இருக்கின்றது. அதில் சிறப்பு பதிப்பு என்டார்க்-இன் வால் பகுதி மின் விளக்கு (Tail LED Light)-இன் படம் இடம் பெற்றிருக்கின்றது.

இதே டிவிஎஸ் நிறுவனம்-தான் சமீபத்தில் அதன் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (Apache RTR 160 4V) மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி (Apache RTR 160 2V), மாடல்களில் பிளாக் டார்க் எடிசன் எனும் பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்தே, தற்போது தன்னுடைய பிரபல ஸ்கூட்டர் மாடலையும் இந்த வரிசையில் இணைக்கும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டீசர் படத்தையும் அது தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு சீக்கிரமே இந்த வாகனத்தை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது டிவிஎஸ் என்டார்க் பிளாக் எடிசனுக்கு ப்ரீ புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டீசர் படத்திலும் இது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. கவர்ச்சியாக காட்டுவதற்கான அலங்கரிப்பு வேலையை மட்டுமே இந்த சிறப்பு பதிப்பில் டிவிஎஸ் செய்திருக்கும் என நம்பப்படுகின்றது. இப்போது வரை அந்த வாகனம் பற்றிய வேறு எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளையும் டிவிஎஸ் அறிவிக்கவில்லை. விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

அதேவேளையில், முன்னதாக கூறியதைப் போல முழுக்க முழுக்க கருப்பு நிற அலங்கரிப்பு மட்டுமே செய்யப்பட்டு இருக்கும், வேறு எந்த மாற்றமும் இந்த ஸ்கூட்டரில் செய்யப்பட்டு இருக்காது என நம்பகமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இப்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான என்டார்க் உடன் பலநிலைகளில் இந்த வாகனம் ஒத்துப்போகும் என எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் என்டார்க் இப்போதைய நிலவரப்படி ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. என்டார்க் 125, என்டார்க் 125 ரேஸ் எடிசன், என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன், என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி மற்றும் என்டார்க் 125 எக்ஸ்டி ஆகியவையே அவை ஆகும். இவற்றிலேயே புதிதாக ஆறாவது தேர்வாக பிளாக் எடிசன் இணைய உள்ளது.

இதன் ஆரம்ப விலை ரூ. 95,120 ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 1.11 லட்சம் மட்டும்தான். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஸ்கூட்டரில் தொழில்நுட்ப அம்சங்களாக பல வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், டிவிஎஸ் இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் இணைப்பு அம்சம், ப்ளூடுத் இணைப்பு, ஸ்மார்ட்எக்ஸ்டால்க் எனும் அம்சம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஸ்மார்ட்எக்ஸ்டிராக் எனும் சிறப்பு வசதியையும் டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளின் ஸ்கோர், சோசியல் மீடியா அப்டேட், செய்திகள், கால நிலை பற்றிய அறிவிப்புகள் போன்றவற்றை அறிய முடியும்.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் திறன் வெளிப்பாடு வேரியண்டைப் பொருத்து வேறுபடும். அந்தவகையில், ரேஸ் எக்ஸ்பி மற்றும் ரேஸ் எக்ஸ்டி ஆகிய தேர்வுகளில் 10.2 எச்பி பவரையும், 10.8 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். அதேவேளையில், மற்ற தேர்வுகளில் 9.4 எச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் ஆற்றலையே அந்த மோட்டார் உருவாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதியை முன்னிட்டு இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பு பதிப்புகளையும், சிறப்பு சலுகைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் என்டார்க் மாடலின் புதிய பதிப்பின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. விரைவிலேயே இதை விற்பனைக்கும் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2024, 10:59 [IST]
English summary
Tvs motors teases ntorq black edition here is more details
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+