பெரிய தலைங்க எல்லாம் கைய கட்டிட்டு நிக்க வேண்டியது தான்! டிவிஎஸ் தன் பலத்தை காட்டப்போகுது!

இந்திய மார்கெட்டில் ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வரும் நிலையில் வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அடுத்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மார்க்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூடர்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே ஐ-க்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்து எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைக்கிறது. இதுவரை இந்நிறுவனம் 1.27 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளன. இதன் மூலம் ரூபாய் 1600 கோடியை அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது.

tvs new electric scooter

இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அந்நிறுவனம் புதிதாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் சிஇஓ ராதாகிருஷ்ணன் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது இந்த தகவலை தெரிவித்தார்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் டூவீலர் விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது மிக குறைவாகவே விற்பனையாகி வருகின்றன. இருந்தாலும் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கணித்துள்ளதால் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பல்வேறு விதமான யுக்திகளை ஒவ்வொரு நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன.

tvs new electric scooter

இந்திய மார்க்கெட்டில் தற்போது ஓலா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது0 அதைத்தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனமும் பஜாஜ் நிறுவனமும் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த செக்மெண்ட்டில் முதல் இடத்தை பிடிப்பதற்காக டிவிஎஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அதற்காக புதிய தயாரிப்புகளை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் புதிய தயாரிப்பு குறித்த எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதை தயாரிப்புகள் ஏற்கனவே இருக்கும் டிவிஎஸ் ஐ-கியூப் ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட போகிறதா அல்லது முற்றிலும் வேறு தயாரிப்பாக இருக்கப்போகிறதா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எந்த வகை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட உள்ளது என்ற விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

tvs new electric scooter

ஆனால் நிச்சயம் டிவிஎஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்காக முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஓலா நிறுவனம் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூடர்களை விற்பனைக்கு கொண்டு வந்து ஓரளவு நல்ல விற்பனையை பெற்று வருகிறது. இதற்கு போட்டியாக தான் டிவிஎஸ் நிறுவனம் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகும் பட்சத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன வரிசையை விரிவுபடுத்த முயற்சி செய்துள்ளது என எடுத்துக் கொள்ளலாம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் பட்சத்தில் நிச்சயம் ஓலா நிறுவனத்துடன் விற்பனை எண்ணிக்கையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டரை பொறுத்தவரை 2.2,3.4 மற்றும் 5.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் ரூபாய் 94,000 முதல் ரூபாய் 1.85 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்திய மார்க்கெட்டில் குறைவான விலையில் வாகனம் வாங்க நினைப்பவர்கள் முதல் அதிக விலையில் வாகனம் வாங்க நினைப்பவர்கள் வரை பலரை கவரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் வாகன விற்பனை அதிக காலமாக மாற்றமடைந்து வருகிறது. பல எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்பி வரும் நிலையில் தற்போது டிவிஎஸ் நிறுவனம் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தி மக்களின் தேவை பூர்த்தி செய்தால் நிச்சயம் இந்த வாகனத்தின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 17:20 [IST]
English summary
Tvs new electric scooter launch by march 2025
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X