பவர்ஃபுல்லான ஸ்கூட்டரை உருவாக்கி ஹோண்டாவுக்கு சவால்விடும் டிவிஎஸ்!! தமிழ்நாட்டு தயாரிப்பு தரமானதாக இருக்கும்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களுள் ஒன்று எண்டார்க் (NTORQ) ஆகும். டிவிஎஸ் மோட்டாரின் 125சிசி ஸ்கூட்டராக விளங்கும் எண்டார்க்-இல் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, எண்டார்க் 125 ஸ்கூட்டரை இனி புதியதாக எந்தெந்த பெயிண்ட் ஆப்ஷன்களில் பெறலாம் என்பதையும், இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார் ஆகும். இந்த நிறுவனத்தின் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரையும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் வாங்குகின்றனர்.

tvs ntorq new colour options

குறிப்பாக, இளம் தலைமுறையினரை கவரும் விதமாக ஸ்டைலிஷான தோற்றத்தில் டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர் உருவாக்கப்படுகிறது. இந்த நிலையை தொடரும் முயற்சியாக, எண்டார்க் 125 ஸ்கூட்டரில் அப்டேட்களை வழங்க டிவிஎஸ் நிறுவனம் எப்போதும் மறந்தது இல்லை. அந்த வகையில், தற்போது எண்டார்க் 125 ஸ்கூட்டரில் புதியதாக 3 பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டர்க்கைஸ், ஹார்லெக்வின் நீலம் மற்றும் நார்டோ கிரே என்பன அந்த 3 பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் உடன், டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் புதியதாக ரேஸ் எக்ஸ்.பி (Race XP) என்கிற ஸ்பெஷல் எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசனில் மேட் கருப்பு நிறத்தில் எண்டார்க் 125 ஸ்கூட்டர் கிடைக்கும்.

tvs ntorq new colour options

சொரசொரப்பான மற்றும் பளபளப்பான என 2 விதமான ஷேட்களில் கருப்பு நிறத்தில் புதிய எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் கிடைக்கும். பிரத்யேகமான பெயிண்ட் கிடைப்பது மட்டுமல்லாமல், என்ஜினில் இருந்து இயக்க ஆற்றலும் இந்த ஸ்பெஷல் எடிசனில் அதிகமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8சிசி, 3-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. எண்டார்க் ஸ்கூட்டரின் மற்ற வேரியண்ட்களில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9.5 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்-இல் 10.6 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே, ரேஸ் எக்ஸ்பி ஸ்பெஷல் எடிசனில் 7,000 ஆர்பிஎம்-இல் 10.2 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.9 என்.எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை இந்த என்ஜின் வெளிப்படுத்தும்.

tvs ntorq new colour options

இந்த வகையில் பார்த்தால், இந்தியாவின் பவர்ஃபுல்லான 125சிசி ஸ்கூட்டராக டிவிஎஸ் எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி எடிசன் விளங்குகிறது. அதுமட்டுமின்றி, ஷார்ப்பான லைன்கள் உடன் எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி எடிசன் தோற்றத்திலும் ஸ்டைலிஷானதாக உள்ளது. புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் உடன் டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.86,871-இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.97,501 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஃபுல்-டிஜிட்டல் டிஸ்பிளே, ட்யூயல் ரைடு மோட்கள் மற்றும் சிக்னெச்சர் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக எண்டார்க் 125 விளங்குகிறது. இதனை வரும் காலத்திற்கும் தொடரும் முயற்சியாகவே இவ்வாறு அவ்வப்போது புது, புது பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய பெயிண்ட்கள் பார்ப்பதற்கு அருமையாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2024, 8:00 [IST]
English summary
Tvs ntorq 125 scooter gets new colour options check all details here
மேலும்... #tvs motor #tvs #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X