அழகிய கருப்பு நிறத்தில் விலை குறைவான டிவிஎஸ் பைக் அறிமுகம்.. ஆரம்ப நிலை தேர்விலேயே வாங்கிக்கலாம்!

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடலாக ரேடியான் (Radeon) இருக்கின்றது. இது ஓர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக் மாடல் ஆகும். மேலும், அதிகம் மைலேஜ் தரும் தயாரிப்பாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த பைக் மாடலிலேயே டிவிஎஸ் நிறுவனம் தற்போது புதிய நிற தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முழு கருப்பு நிற ஆப்ஷனையே ரேடியான் பைக் மாடலில் அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதிய நிற தேர்வானது பிளாக் பேஸ் எடிசன் (Black Base Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.

மேலும், பேஸ் வேரியண்டிலேயே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. புதிய நிற தேர்வுடன் சேர்த்து ஏழு வண்ண ஆப்ஷன்களில் டிவிஎஸ் ரேடியான் விற்பனைக்குக் கிடைக்கும். வேரியண்டைப் பொருத்த வரை மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். பேஸ் (Base), டிஜி டிரம் (Digi Drum) மற்றும் டிஜி டிஸ்க் (Digi Disc) ஆகியவை அவை ஆகும்.

TVS radeon black colour launched

டிவிஎஸ் நிறுவனம் ரேடியான் பைக்கை ரூ. 69,598 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மற்ற இரண்டு வேரியண்டுகள் ரூ. 79,620 மற்றும் ரூ. 83,620 ஆகிய விலைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதிய கருப்பு நிறமான க்ளாஸ்ஸி ஸ்டைலிலேயே காட்சியளிக்கின்றது. வீல் தொடங்கி பின் பக்க உலோக ஸ்டாண்டுகூட கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கின்றது. அதேவேளையில், எஞ்சின் கவருக்கு பித்தளை நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அந்த பைக்கிற்கு மிகவும் தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

TVS radeon black colour side view

லிட்டர் ஒன்றிற்கே 60 க்கும் அதிகமான கிமீ வரையில் மைலேஜ் தரக் கூடிய ஓர் பைக் மாடலே ரேடியான் ஆகும். இந்த பைக்கில் 109.7 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7,350 ஆர்பிஎம்மில் 8 பிஎஸ் பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் உருவாக்கத்தில் டிவிஎஸ் நிறுவனம் சிங்கிள் கிரேடில் ட்யூப்ளர் வகை ஃப்ரேமையே பயன்டுத்தி இருக்கின்றது. தொடர்ந்து, சிறந்த இயக்க அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் ப்ரீ-லோடு அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மேலும், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் 110 மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது.

இத்தனை சிறப்புகளைத் தாங்கிய பைக்கிற்கே கூடுதல் சிறப்பை முழு கருப்பு நிறத்தால் டிவிஎஸ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, அட்வான்ஸ்டு அம்சங்கள் சிலவற்றையும் டிவிஎஸ் ரேடியான் தன்னுள் தாங்கியிருக்கின்றது. அந்தவகையில், கலர்ஃபுல் எல்சிடி திரை மற்ஏறும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவற்றை அது பெற்றிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் மற்றும் விலை குறைவான பைக் மாடலாக டிவிஎஸ் ரேடியான் இருக்கின்றது. இந்த பைக்கிற்கு இந்தியாவின் அடித்தட்டு மக்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதில் முழு கருப்பு நிற பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. வருகின்ற விழாக் காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 16:10 [IST]
English summary
Tvs radeon launched with all black colour option for base variant
மேலும்... #tvs motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+