தமிழ்நாட்டோட தயாரிப்புக்கு இப்படி ஒரு வரவேற்பா! ஆளுக்கு ஒரு டீ வாங்குறத போல இந்த பைக்கை வாங்கிட்டு இருக்காங்க!
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக ரைடர் 125 (Raider 125) இருக்கின்றது. இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்டி லுக் கொண்ட பைக் மாடல் இதுவாகும். இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இரண்டரை ஆண்டுகளே ஆகின்றன.
இந்த நிலையிலேயே அது விற்பனையில் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 8 லட்சம் யூனிட் விற்பனையை அது எட்டிவிட்டதாகவே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஓர் பைக் விற்பனையாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, இந்த நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் டிவிஎஸ் ரைடர் 125 பைக் மாடல் விற்பனையாகி இருக்கின்றது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே விற்பனையாகிய எண்ணிக்கை இதுவாகும். இதுமட்டுமில்லைங்க இதற்கு முந்தைய மாதங்களிலும் மிக அதிக எண்ணிக்கையிலேயே இந்த பைக் மாடல் விற்பனையாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிவிஎஸ் ரைடர் 125, 2022 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்தவகையில், நிதியாண்டு 2022 இல் மட்டும் 76,742 யூனிட்டுகள் அந்த ரைடர் 125 விற்பனையாகியது. இதேபோல், நிதியாண்டு 2022-23 இல் 2,39,388 யூனிட்டுகளும், நிதியாண்டு 2023-24 இல் 4,78,443 யூனிட்டுகளும் விற்பனையாகின.
ஒட்டுமொத்தமாக, அதாவது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இப்போது வரை 8,45,671 யூனிட்டுகள் வரை டிவிஎஸ் ரைடர் 125 விற்பனையாகி இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் 125சிசி பைக்குகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே ரைடர் 125 பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பு அமைந்திருக்கின்றது.
ஹீரோ கிளாமர், சூப்பர் ஸ்பிளெண்டர், பஜாஜ் பல்சர் மற்றும் ஹோண்டா ஷைன் ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே இந்த பைக் மாடல் ஆகும். இவர்கள் அனைவருக்கும் மிக சிறந்த போட்டியாளனாக டிவிஎஸ் ரைடர் 125 மாறியிருப்பதும் இந்த விற்பனை எண்ணிக்கையின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் டிவிஎஸ் ரைடர் 125 விற்பனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சிங்கிள் சீட், ஸ்பிளிட் சீட் மற்றும் இசட்எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 94,399 ஆகும். மேலும், இதன் அதிகபட்ச விலையே ரூ. 1.10 லட்சம் மட்டுமே ஆகும்.
எஞ்சினைப் பொருத்த வரை 124.8 சிசி திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.4 எச்பி பவரையம், 11.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதுமாதிரியான வேகத்தை எட்டுவதில் மட்டுமல்ல மைலேஜை தருவதிலும் மிக சிறந்த பைக் மாடலாக ரைடர் 125 இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கே 67 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதுபோன்று ஏகப்பட்ட சிறப்புகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே டிவிஎஸ் ரைடருக்கு இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த பைக் தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் பெஸ்ட்டானதாகவே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை, ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதனை செல்போனுடன் இணைப்பதனால், செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, வாய்ஸ் மற்றும் நேவிகேஷன் அசிஸ்ட், சைடு-ஸ்டாண்டு கட்-ஆஃப் வசதி ஆகியவையும் ரைடர் 125இல் வழங்கப்பட்டிருக்கின்றன. சைடு ஸ்டாண்டு போட்டபடி இந்த பைக்கை ஓட்டினால் தானாகவே எஞ்சினை ஆஃப் செய்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக சிறப்பம்சங்கள் மற்றும் குறைவான விலை ஆகியவற்றின் காரணத்தினாலேயே இந்த பைக்கிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட பைக்காகவும் ரைடர் 125 காட்சியளிக்கின்றது. இதனால்தான் தற்போது அது விற்பனையில் வரலாறுகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








