72 கிமீ மைலேஜ் தரும் டிவிஎஸ் பைக்கிற்கே இப்படி ஒரு நிலைமையா... யாருமே இதை எதிர்பாத்திருக்க மாட்டாங்க...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் (TVS Raider). இந்த பைக்கின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 29,850 ரைடர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 34,309 ஆக இருந்தது. அதாவது 4,459 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 13 சதவீத வீழ்ச்சி ஆகும். 13 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியலில் டிவிஎஸ் ரைடர் பைக் 7வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆரம்ப விலை 98,709 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1.09 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11.38 பிஎஸ் பவரையும், 11.20 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரைடர் பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 71.94 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர்கள் ஆகும். எனவே ஒரு முறை முழுமையாக பெட்ரோலை நிரப்பினால், 719.40 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும்.
இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 (Hero Xtreme 125), பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125), ஹீரோ க்ளாமர் (Hero Glamour), ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) உள்ளிட்ட பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டிவிஎஸ் ரைடர் 125 திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ரைடர் பைக், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்திருந்தது. ஆனால் அதை தொடர்ந்து வந்த ஜூன் மாதத்தில் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. எனினும் வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து டிவிஎஸ் ரைடர் பைக் மீண்டு வரும் என நாம் நம்பலாம்.
இந்திய சந்தையின் 125 சிசி செக்மெண்ட்டில், ஸ்போர்ட்ஸ் பைக்குளை போன்ற தோற்றம் கொண்ட, ஒரு பிரீமியமான பைக்கை எதிர்பார்க்க கூடிய இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் டிவிஎஸ் ரைடர் பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








