பாத்தா 125 சிசி பைக் மாதிரியே இல்ல! விலை இவ்ளோதானா! காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு பதிலா இதை வாங்கிக்கலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் (TVS Raider). இதன் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 37,249 ரைடர் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 34,440 ஆக மட்டுமே இருந்தது. இது 8.16 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியலில் டிவிஎஸ் ரைடர் 6வது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் ரைடர் பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 124.8 சிசி இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8.37 kW பவரை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

TVS Raider 125

இந்த பைக்கின் எடை 123 கிலோவாக இருக்கிறது. தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் பைக்கின் சிங்கிள் சீட் வேரியண்ட்டின் விலை 95,219 ரூபாய் ஆகவும், ஸ்பிளிட் சீட் வேரியண்ட்டின் விலை 97,019 ரூபாய் ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் எஸ்எஸ்இ வேரியண்ட்டின் விலை 1,00,119 ரூபாய் ஆக இருக்கிறது.

மறுபக்கம் இந்த பைக்கின் எஸ்எக்ஸ் வேரியண்ட்டின் விலை 1,03,570 ரூபாய் ஆக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஸ்ட்ரைக்கிங் ரெட், விக்கெட் பிளாக், ப்ளாசிங் ப்ளூ, ஃபோர்ஸா ப்ளூ, ஃபயரி யெல்லோ, அயர்ன் மேன் மற்றும் பிளாக் பாந்தர் ஆகிய கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் கிடைக்கும்.

TVS Raider 125 Display

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 8 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டிவிஎஸ் ரைடர் பைக் சமீபத்தில் கடந்தது. இந்த பிரம்மாண்ட மைல்கல்லை கடப்பதற்கு டிவிஎஸ் ரைடர் பைக் வெறும் 31 மாதங்களை மட்டுமே எடுத்து கொண்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் டிவிஎஸ் ரைடர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதமே ஒட்டுமொத்தமாக 8 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டிவிஎஸ் ரைடர் பைக் கடந்து விட்டது.

இந்திய சந்தையில் ஹீரோ க்ளாமர் (Hero Glamour), ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor), ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 (Hero Xtreme 125), பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125), ஹோண்டா ஷைன் (Honda Shine) உள்ளிட்ட பைக்குகள் உடன், டிவிஎஸ் ரைடர் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 125 சிசி செக்மெண்ட்டில் ஒரு பிரீமியமான பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் ரைடர் மிகவும் ஏற்றதாக இருக்கும். குறிப்பாக டிவிஎஸ் ரைடர் பைக்கானது, இளம் தலைமுறையினருக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 17:50 [IST]
English summary
Tvs raider sales report may 2024 full details
மேலும்... #tvs #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+