இவ்ளோ அழகா இருக்கே இந்த பைக் விற்பனைக்கு வருமா?.. டிவிஎஸ் கை வண்ணத்தில் இப்படி ஒரு பைக்கா!!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் புதிய ரோனின் பராக்ரம் (RONIN Parakram) எனும் பைக் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. ரோனின் 225 பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட ஓர் சிறப்பு பதிப்பே இதுவாகும். இது ரோனின் பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், பராக்ரம் ஆனது 1999 ஆம் ஆண்டில் அரங்கேறிய கார்கில் போரின் நினைவாக உருவாக்கப்பட்டு சிறப்பு பதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, கார்கில் போர் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக ரோனின் பராக்ரம் பைக்கை டிவிஎஸ் தயார் செய்துள்ளது.

மிகவும் தனித்துவமான அலங்கரிப்பு மற்றும் சிறப்புகளை தாங்கிய பைக்காவே இது காட்சியளிக்கின்றது. கார்கில் விஜய் திவாஸ் 25 ஆம் ஆண்டு என்கிற கிராஃபிக் மற்றும் வீரர்கள் தேசிய கொடியை தாங்கி இருக்கும் கிராஃபிக் ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், '99' வீரர்களை விளக்கும் விதமாக 99 என்கிற எண்ணும் இதில் இடம் பெற்றிருக்கின்றது.

TVS ronin parakram kargil edition

இதுமட்டுமில்லைங்க, ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் பச்சை நிறமே இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிறம் மட்டுமல்ல சில்வர் மற்றும் தங்க நிறமும் இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, தேசிய கொடியை பிரதிபலிக்கும் நிறத்தாலான கோடுகளும் ஃப்யூவல் டேங்க்கில் இடம் பெற்றிருக்கின்றன.

இவையே ரோனின் பராக்ரம் பைக் மாடலின் தனி சிறப்புகள் ஆகும். இதுமட்டுமில்லைங்க, சில தனித்துவமான சிறப்பம்சங்களையும் இந்த பைக் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், ஆஃப்-ரோடை சமாளிப்பதற்கான அம்சங்களையே இந்த பைக் தன்னுள் தாங்கி இருக்கின்றது. டயர் முதல் எக்சாஸ்ட் சிஸ்டம் வரை என அனைத்தும் தனி சிறப்புகள் கொண்டவை ஆகும்.

TVS ronin parakram kargil edition side view

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கை வாகன கஸ்டமைஸ் நிறுவனத்தைப் போல தனிபயனாக்கம் செய்து இருக்கின்றது. அந்தவகையில், பைக்கை மிகவும் முரட்டுத் தனமான டூ-வீலராக காண்பிக்கும் வகையில் பாகங்கள் பல இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த டயர்கள், பிரத்யேக வால் பகுதியைக் கொண்ட இருக்கை, ஹெட்லைட், மட்குவார்டு மற்றும் எஞ்சின் குவார்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளையும், மாற்றங்களையும் இந்த பைக் தாங்கி இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

TVS ronin parakram kargil edition rear

இப்போதைக்கு காட்சிப்படுத்தல் மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது. இது விற்பனைக்கு வருமா என்கிற விபரங்களும் வெளியாகவில்லை. டிவிஎஸ் நிறுவனத்தின் சூப்பரான பைக் மாடல்களில் ஒன்றாக ரோனின் 225 காட்சியளிக்கின்றது. இந்த பைக் மாடலில் 225 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 20.1 பிஎச்பி மற்றும் 19.93 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும். இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பைக் ரூ. 1.49 லட்சம் தொடங்கி ரூ. 1.73 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய ஓர் பைக் மாடலிலேயே கார்கில் போரை நினைவைப் படுத்தும் விதமாகவும், போரின் போது இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் ரோனின் பைக்கிற்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் நிறுவனம் அதில் சிறப்பு பதிப்பு ஒன்றை தயார் செய்திருக்கின்றது. இது விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா என்பது தெரியவில்லை. மேலும், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள், இந்த பைக் விற்பனைக்கு வருவது சந்தேகமே என்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 4, 2024, 19:04 [IST]
English summary
Tvs ronin parakram kargil edition custom motorcycle
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X