ராயல் என்ஃபீல்டு எல்லாம் ஒரம் போ! புதிய டிவிஎஸ் 300 சிசி இன்ஜின் வெளியானது!
டிவிஎஸ் நிறுவனம் இன்று கோவாவில் நடந்து வரும் டிவிஎஸ் மோட்டோசோல் நிகழ்ச்சியில் தனது புதிய லிக்யூட் கூல்டு இன்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜினுக்கு ஆர்டிஎக்ஸ் டி4 என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. 2025ம் ஆண்டு நிறுவனம் வெளியிட உள்ள புதிய பைக்கில் இந்த இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி டிவிஎஸ் மோட்டோசோல் என்ற நிகழ்ச்சி இந்த ஆண்டு தற்போது கோவாவில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும்.

அதன்படி நிறுவனம் இன்று தனது புதிய இரண்டாவது லிக்யூட் கூல்டு இன்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜினிற்கு ஆர்டிஎக்ஸ்டி 4 என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த இன்ஜினை அந்நிறுவனம் 2025ம் ஆண்டு வெளியிட உள்ள தனது அட்வெஞ்சர் பைக்கில் பொருத்தும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இன்ஜின் குறித்த விபரங்கள் பல்வேறு விதமான ஈர்க்கும் தகவல்களை கொண்டதாக இருக்கிறது.
டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ்டி 4 இன்ஜினை பொறுத்தவரை லிக்யூட் கூல்டு இன்ஜினாக இருக்கிறது. இது டூயல் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 78 மிமீ ஸ்டோக்கும், 62.6 மிமீ போரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 299.1 சிசி திறன் கொண்ட இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இன்ஜின் 9000 ஆர்பிஎம்-ல் 34.52 பிஎச்பி பவரையும் 7000 ஆர்பிஎம்-ல் 28.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே 310சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்டு இன்ஜினை தயாரித்து பயன்படுத்தி வருகிறது. அந்த இன்ஜின் தான் ஆர்ஆர் 310 மற்றும் ஆர்டிஆர் 310 ஆகிய பைக்குகளில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தில் வரும் ஆர் ஆர் 310 பைக்கில் இந்த இன்ஜின் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பழைய இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் ரைடு பை வயர் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆர்டிஎஃப் டி4 இன்ஜின் டிஃப்ரெக்டர் பிளஸ் டாக்ட் சிஸ்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஜின் சூடு குறித்த செக்கப் செய்யும் அளவிற்கு இதில் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆர்டிஎக்ஸ்டி 4 இன்ஜினை தனது முதல் அட்வெஞ்சர் பைக்கில் பொருத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் 2025ம் ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இந்த பைக்கில் இந்த இன்ஜின் பொருத்தப்படும் போது இன்ஜினில் ஆர்டிஎக்ஸ் என்ற பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த இன்ஜின் குறித்த தகவல் மக்களுக்கு அதிகம் பொய் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இந்த வாகனத்திற்கும் ஆர்டிஎக்ஸ் என்ற பெயரையே வைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை முன்பக்கம் யூஎஸ்டி ஃபோர்க்கும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. இதே செட்டப் தான் பிஎம்டபிள்யூ ஆர்ஆர் 310மற்றும் டிவிஎஸ் ஆர்டிஆர் 310 பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பைக்குக்கு மாற்றாக அட்வெஞ்சர் பைக் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் தனது 310 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பைக்கில் பொருத்திய அதே ரைடு பை ஒயர் சிஸ்டத்தை தான் புதிய rtx d4 இன்ஜின் எல்லோரும் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு விதமான ரைடு மோடுகளையும் அந்த பைக்கில் வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கண்சோல் மற்றும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் ஆப் கனெக்டிவிட்டி ஆப்ஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் அட்வெஞ்சர் ரக பைக்குகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் தான் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ரக வாகனங்களை தற்போதே தயார் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள். டிவிஎஸ் நிறுவனமும் தனது புதிய இன்ஜினுடன் இந்த செக்மென்ட் பைக்கை தயாரித்து போட்டியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









