இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழக நிறுவனம்! இப்படி ஒரு வளர்ச்சியை யாருமே எதிர்பார்க்கல!

ஜூலை மாதம் முடிந்த நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி டிவிஎஸ் நிறுவனமும் தங்களது விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் மொத்தம் 3,22,168 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 5.85 சதவீத வளர்ச்சியை டூவீலர் செக்மெண்டில் மட்டும் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 3,33,646 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 3,16,411 வாகனங்களை தான் விற்பனை செய்தது. தற்போது கூடுதலாக 17,235 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு 5.45 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு செக்மென்ட் வாரியான விற்பனை விவரங்களை காண்போம்.

tvs sales june 2024

டிவிஎஸ் நிறுவனம் டூவீலரில் பைக் செக்மெண்டில் மட்டும் கடந்த ஜூன் மாதம் 1,52,701 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு 1,48,208 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தற்போது 4493 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 3.03 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

அடுத்ததாக ஸ்கூட்டரை பொறுத்தவரை 1,28,986 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1,21,364 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 7,622 வாகனங்கள் விற்பனையாகி 6.28% அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டை பொருத்தவரை கடந்த ஜூன் மாதம் மட்டும் 15, 859 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

tvs sales june 2024

இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14,462 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. கூடுதலாக 1397 வாகனங்கள் விற்பனையாகி 9.6% அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. மொபட்டை பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 40,481 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 34,829 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 16.23 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

டூவீலரை பொருத்தவரை இந்நிறுவனம் 2,55,734 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. 66,434 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டு விற்பனையில் 19,901 வாகனங்கள் கூடுதலாக விற்பனை செய்து 8.44 சதவீத வளர்ச்சியும், ஏற்றுமதியில் 2134 வாகனங்கள் குறைவாக ஏற்றுமதி செய்து 3.11 சதவீதம் வீழ்ச்சியும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது.

tvs sales june 2024

3வீலர் செக்மென்டை பொறுத்தவரை இந்நிறுவனம் 1208 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. 10,270 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் இந்நிறுவனம் உள்நாட்டில் 1434 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. 1076 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது இதில் உள்நாட்டு விற்பனையில் 15.76 சதவீத வீழ்ச்சியும் ஏற்றுமதியில் 2.89 சதவீத வீழ்ச்சியும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை சேர்த்து பார்க்கும் போது 2,56,942 வாகனங்களை நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுவே 76,704 வாகனங்களை இந்நிறுவனம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2,37,267 வாகனங்களை மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இது 8.29% வளர்ச்சியாகும்.

ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 79, 144 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 3.08 சதவீத வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சேர்த்து பார்க்கும் போது இந்நிறுவனம் 5.45 சதவீத அளவிற்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் கடந்த மே மாதம் விற்பனை விபரங்களை வைத்து பார்க்கும் போது, இந்நிறுவனம் 9.80 சதவீதம் அளவிற்கு விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் தான் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து இந்தியா முழுவதும் அனுப்பி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 3, 2024, 7:00 [IST]
English summary
Tvs sales june 2024 3 33 lakh 5 percent growth
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X