டிவிஎஸ் XL எலெக்ட்ரிக் வண்டி ரெடி! புத்தாண்டு பிறந்ததும் முதல்ல தலைவன் தரிசனம் தான்!

டிவிஎஸ் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் போவதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வாகனம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை என்றாலும் இந்த தகவல் பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. இது பலரது கவனத்தை இந்த எலெக்ட்ரிக் டூவீலர் பக்கம் திசைதிருப்பி உள்ளது. இந்த தகவல் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து சமீபத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இது மார்க்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் தெரிவித்திருந்தது.

tvs xl electric

இந்த தகவல் வெளியான நிலையில் பலரும் இந்த ஸ்கூட்டர் எப்படியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டரை வெற்றிகரமாக இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் நிலையில், இதிலேயே புதிய அப்டேட் செய்யப்பட்டு ஸ்கூட்டர் வெளியாக போகிறதா? அல்லது முற்றிலும் புதிய தளத்தில் ஸ்கூட்டர் தயாராகி வெளியாகப் போகிறதா என்ற கேள்விகள் இருந்தது.

இதற்கிடையில் டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் இந்த கூட்டத்தின் டெலிவரி இதுவரை துவங்கவில்லை. இதில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்வதற்காக டிவிஎஸ் நிறுவனம் இதை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பு முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான அறிவிப்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

tvs xl electric

டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் என்ற மொபட் இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்த வாகனமாகவும் ஒவ்வொரு கிராம புறத்திலும் உள்ள மக்கள் இந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்த தொடங்கினார்கள். இது அதிக எடையை சுமந்து செல்லும் அதே நேரத்தில் எளிமையாக இருக்கும். வாகனம் சரியாக ஓட்டத் தெரியாத நபர்கள் கூட இந்த வாகனத்தை எளிமையாக ஓட்டும் வகையில் வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இன்று கூட கிராமப்புற பகுதிகளில் இந்த வாகனங்களுக்கான வரவேற்ப்பு இருக்கும் நிலையில், இந்த வாகனத்தின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தான் டிவிஎஸ் நிறுவனம் தற்போது உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ்எல் இவி மற்றும் இ-எக்ஸ்எல் ஆகிய இரண்டு பெயர்களையும் டிரேட் மார்க் செய்து வைத்துள்ளது.

tvs xl electric

ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், இந்த நேரத்தில் இப்படியான வாகனத்தை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்கினால் நிச்சயம் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என நிறுவனம் கருதி இந்த வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஜுபிடர் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கூட்டர் கூட அப்டேட் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. என்னதான் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இது விற்பனைக்கு அறிமுகமானாலும், ஜனவரி மாதம் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தியாவில் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரத் மொபைல் குளோபல் கண்காட்சி நடக்கிறது. இதில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள். இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில் நிச்சயம் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனத்திற்கு நல்ல பெயரை வைத்து அனைவரும் தனது வாகனங்களை சிறப்பாக விற்பனை செய்து வரும் நிலையில், இந்த புதிய வாகனமும் நிச்சயம் மார்க்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 12:00 [IST]
English summary
Tvs xl electric launch new two wheeler next six months
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X