டிவிஎஸ் எக்ஸ்எல் இவி வருவது உறுதியானது! விலையும் இவ்வளவு கம்மி தானா?
டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ்எல் மொபட்டை எலக்ட்ரிக் அவதாரத்தை விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. கிராமப்புற மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு செல்ல இது மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மொபட்டிற்கான காப்புரிமை விண்ணப்பத்தை அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாட்டை கொண்டு வருவதில் மொப்பட் என்பது மிகப்பெரிய அளவில் புரட்சியை செய்தது இன்றளவும் கிராமப்புறங்களில் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். முக்கியமாக வீதி வீதியாக சென்று வியாபாரம் செய்யும் சிறு சிறு வியாபாரிகள் இந்த ரக வாகனத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ் எல் என்ற மொபட் மக்கள் மத்தியில் பிரபலமாக விற்பனையாகி வருகிறது.

இன்று இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் 100 என்ற மொபட் ரூபாய் 45 ஆயிரம் முதல் ரூபாய் 60 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள மக்கள் தங்கள் விவசாய பணிகளுக்காகவும் சிறு சிறு வியாபார பணிகளுக்காகவும் இந்த எக்ஸ்எல் மொபட் வாகனத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு வருகிறது.
படிப்படியாக ஒவ்வொரு செக்மெண்டாக எலெக்ட்ரிக் வாகனம் என்பது இந்தியாவில் அறிமுகமாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே கைனட்டிக் இ-லூனா என்ற எலெக்ட்ரிக் மொபட் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனையாகி வருகிறது. இந்த இ-லூனா என்பது ஒரு காலத்தில் லூனா என்ற மொபட்டாக இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான மொபட்டாக இருந்தது. தற்போது அது எலெக்ட்ரிக் அவதாரம் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த கைனட்டிக் இ-லூனா மொப்பாட்டிற்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ்எல் மொபட்டின் எலெக்ட்ரிக் அவதாரத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்நிறுவனம் டிவிஎஸ் இ எக்ஸ்எல் என்ற பெயரையும் டிவிஎஸ் எக்ஸ்எல் இவி என்ற பெயரையும் தற்போது டிரேடு மார்க் செய்துள்ளது. டிரேட் மார்க் செய்தால் தான் அந்த உரிமையை வைத்து வாகனங்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களால் பெயர் வைக்க முடியும்.
தற்போது டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொபட் வாகனத்திற்கான டிரேடு மார்க்கை பதிவு செய்துள்ள நிலையில் விரைவில் இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொபட் மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டிவிஎஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை, என்றாலும் நமக்கு கிடைத்த தகவலின் படி மிக விரைவாக இந்த மொப்பட் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் எக்ஸ்எல் பிரபலமாவதற்கு முக்கியமான காரணம் இந்த வாகனத்தை பயன்படுத்துவது என்பது எளிது. அதே நேரம் இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கான செலவு என்பது மிக குறைவாக இருக்கிறது. அதே நேரம் வாகனத்தின் பெர்பார்மன்ஸூம் சிறப்பாக இருப்பதால் பலர் இந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக லாஸ்ட் மைல் டெலிவரி செக்மெண்டில் இந்த வாகன மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டிவிஎஸ் எக்ஸ்எல் எலக்ட்ரிக் மொபட்டை பொறுத்த வரை தற்போது உள்ள பெட்ரோல் இன்ஜின் மொபட்டை விட அதிகமான விலையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் சிறப்பாக இருந்தால்தான் மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு இருக்கும். இதனால் அதிக பாரத்தை இழுக்கும் வகையிலான மோட்டார் மற்றும் பேட்டரியை வழங்கி இருப்பார்கள்.
இதுவே இந்த வாகனத்தின் விலையை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வாகனத்தின் விலை அதிகரித்தாலும் அதை பயன்படுத்துவதற்கான செலவு மிக குறைவாக ஆகிவிடும். அன்றாடம் இந்த வாகனத்தை பயன்படுத்துபவர்கள் எலெக்ட்ரிக் மொப்பட்டிற்கு மாறினால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இதனால் இதன் வருகைக்குப் பிறகு விற்பனை என்பது அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சிறிய வகை எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ்எல் மொபட்டை எலெக்ட்ரிக் அவதாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









