13 வருட பகையை தீர்த்த ஹோண்டா! ஹீரோவை பின்னுக்கு தள்ளி அண்ணாமலை ஸ்டைலில் முதலிடத்தை பிடித்தது!

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் உள்ள டூவீலர் மார்க்கெட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ், சுஸூகி மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் முறையே வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளார்கள். எப்பொழுதும் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ நிறுவனம் இந்த முறை முதலிடத்தை ஹோண்டா நிறுவனத்திற்கு விட்டுக் கொடுத்து விட்டது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்ட நிலையில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது இந்தியாவில் விற்பனையான டூவீலர்கள் குறித்த விரிவான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இதில் ஹீரோ நிறுவனம் இந்த முறை முதலிடத்தை பறிகொடுத்து விட்டது என்றே சொல்லலாம். ஹோண்டா நிறுவனம் தான் இந்த முறை முதலிடத்தில் பிடித்துள்ளது.

two wheeler sales july 2024

ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4,39,118 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 3,10,867 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது 1,28,251 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி ஒரே ஆண்டில் 41.26% வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த டூவீலர் செக்மெண்டில் 32 சதவீத பங்கை இந்நிறுவனம் தான் வைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஹீரோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 3,47,335 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 3,71,204 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 23,869 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. இது 6.43 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

two wheeler sales july 2024

மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 2,54,250 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 2,35,230 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 19,020 வாகனங்கள் விற்பனையாகி ஒரே ஆண்டில் 8.09 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

நான்காவது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 1,68,847 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 1,41,90 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 26,857 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 18.97% விற்பனை வளர்ச்சியாகும்.

two wheeler sales july 2024

ஐந்தாவது இடத்தில் சுஸூகி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1,00,602 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 80,399 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 20,293 வாகனங்கள் விற்பனையாகி ஒரே ஆண்டில் 25.27% அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆறாவது இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 61,568 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 66,062 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 4494 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது இது 6.80 சதவீதம் அளவிற்கு விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டூவீலர் மார்க்கெட்டில் முடி சூடா மன்னனாக இருந்த ஹீரோ நிறுவனம் இந்த முறை முதலிடத்தை பறிகொடுத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த முறை முதலிடத்தை பிடித்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், இந்நிறுவனங்கள் பிரிந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு ஹோண்டா நிறுவனத்திற்கு இது மிகப் பெரிய மைல் கல்லாக கடந்த மாதம் அமைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனம் தான் டூவீலர் மார்க்கெட்டில் இந்தியாவில் மிகப்பெரிய பங்கை வைத்திருந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தற்போது ஹீரோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு தனது விற்பனையை வளர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரே ஆண்டில் 41% அளவிற்கு இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இது நிச்சயம் வியக்கத்தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2024, 11:05 [IST]
English summary
Two wheeler sales july 2024 honda hero tvs bajaj suzuki enfield
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X