பலாப்பழத்தில் ஈ போல் மொய்கிறாங்க!! ஹீரோ 2-வீலர்களை மக்கள் தேடி, தேடி வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?

இந்திய ஆட்டோமொபைல் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 2023-24ஆம் நிதியாண்டு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகளவில் மிக பெரிய 2-வீலர் சந்தையாக நம் இந்தியாவை சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு, இந்தியாவில் 2-சக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய சாட்சியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒவ்வொரு மாதத்திலும் சர்வ சாதாரணமாக 4இல் இருந்து 5 லட்ச 2-சக்கர வாகனங்களை விற்பனை செய்கிறது.

two wheeler sales report fy2023-24

உலகளவில் பெரிய 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து கடந்த நிதியாண்டில் சுமார் 53 லட்சத்து 95,924 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 1 வருடத்தில் கிட்டத்தட்ட 54 லட்ச 2-வீலர்கள் ஹீரோ நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய நிதியாண்டில் (2022 ஏப்ரல் - 2023 மார்ச்) 51 லட்சத்து 35,129 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே ஹீரோ மோட்டோகார்பில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை ஆனது 5.08% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் சுமார் 2 லட்சத்து 60,795 இரு சக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டோகார்பிற்கு அடுத்து, வழக்கம்போல் 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் உள்ளது.

two wheeler sales report fy2023-24

ஹோண்டாவில் இருந்து 2023-24ஆம் நிதியாண்டில் மொத்தம் 40 லட்சத்து 92,126 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022-23ஆம் நிதியாண்டில் ஹோண்டா 2-வீலர்கள் விற்பனை 40 இலட்சத்தை தொடவில்லை. இந்த வகையில் பார்த்தால், கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 18,940 இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது.

ஹோண்டாவுக்கு அடுத்து 3வது இடத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் தனதாக்கி உள்ளது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து கடந்த நிதியாண்டில் மொத்தம் 29,65,744 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 3-சக்கர வாகனங்களும் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், இந்த 29,65,744 என்கிற விற்பனை எண்ணிக்கை ஆனது டிவிஎஸ் 2-வீலர்கள் உடையது மட்டுமே ஆகும்.

two wheeler sales report fy2023-24

நம் தமிழ்நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் இதற்கு முந்தைய 2022-23ஆம் நிதியாண்டில் 24 லட்சத்து 89,121 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனை எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 76,623 அதிகரித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை கூட இந்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

பஜாஜ் ஆட்டோ இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. நடந்து முடிந்த நிதியாண்டில் 21 லட்சத்து 8,049 இரு சக்கர வாகனங்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022-23ஆம் நிதியாண்டில் 17 லட்சத்து 4,445 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பஜாஜ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்த 5வது மற்றும் 6வது இடங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் (8,46,991) மற்றும் ராயல் என்ஃபீல்டு (7,80,904) உள்ளன.

two wheeler sales report fy2023-24

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 1.75 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 3இல் ஒரு பகுதியை ஹீரோ மோட்டோகார்ப் என்கிற ஒரே நிறுவனம் விற்பனை செய்து இருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். கடந்த நிதியாண்டில் ஓலா, ஏத்தர் என்ற இவி நிறுவனங்களும் 1 லட்சத்துக்கும் அதிகமான 2-வீலர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2024, 21:46 [IST]
English summary
Two wheeler sales report of fy24 hero motocorp honda tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X