8 லட்சம் கிமீ வாரண்டி அறிவித்த பிரபல இ-பைக் நிறுவனம்.. தன்னோட தயாரிப்பு மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க!
பிரபல மின்சார பைக் (Electric Motorcycle) உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் (Ultraviolette), அதன் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு 8 லட்சம் கிமீ வாரண்டி திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இதை பெற என்ன செய்ய வேண்டும்? 8 லட்சம் வாரண்டி பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அல்ட்ராவைலட். இந்த நிறுவனமே இதுவரை எந்தவொரு நிறுவனம் அறிவித்திராத மிக சூப்பரான வாரண்டி திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. அது 3 ஆண்டுகள் தொடங்கி 8 ஆண்டுகள் வரை மற்றும் 60 ஆயிரம் கிமீ தொடங்கி 8 லட்சம் கிமீ வரைக்கான வாரண்டி திட்டத்தையே அறிவித்து இருக்கின்றது.

இதனை மூன்று விதமான பேக்குகளின்கீழ் நிறுவனம் வழங்க இருக்கின்றது. யுவி கேர் (UV Care), யுவி கேர் பிளஸ் (UV Care+) மற்றும் யுவி கேர் மேக்ஸ் (UV Care Max) ஆகியவையே அவை ஆகும். யுவி கேர் திட்டத்தின் வாயிலாக 3 ஆண்டுகள்/ 60 ஆயிரம் கிமீட்டருக்கான வாரண்டி வழங்கப்படும்.
அதுவே, யுவி கேர் பிளஸ் திட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள்/ 1 லட்சம் கிமீ வாரண்டி வழங்கப்படும். இது எல்லாம் எங்களுக்கு போதாது என கூறும் வாடிக்கையாளர்களுக்கானதே யுவி கேர் மேக்ஸ் திட்டம் ஆகும். இதுவே 8 ஆண்டுகள் / 8 லட்சம் கிமீட்டருக்கான வாரண்டி திட்டம் ஆகும்.
இந்த புதிய சூப்பரான வாரண்டி திட்டம் நிறுவனத்தின் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இந்திய வாடிக்கையாளர்களால் மட்டுமல்ல வெளிநாட்டு வாடிக்கையாளர்களாலும் இந்த வாரண்டி திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக அதிகபட்சமாக 30 ஆயிரம் கிமீ முதல் 1 லட்சம் கிமீட்டருக்கு மட்டுமே வாரண்டி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதையே தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு விரிவுப்படுத்தி இருக்கின்றது அல்ட்ராவைலட் நிறுவனம். அல்ட்ராவைலட் நிறுவனம் இதுமாதிரியான நடவடிக்கையை மட்டுமில்லைங்க வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு விரைவில் ஓர் புதுமுக தயாரிப்பையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வருகின்ற 24ஆம் தேதி அன்றே அந்த புதுமுக எலெக்ட்ரிக் பைக் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.
இந்த புதுமுக எலெக்ட்ரிக் பைக் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற எலெக்ட்ரிக் பைக்குகளைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லும் என கூறப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களிலேயே அதிக வேகத்தில் இயங்கக் கூடிய மின்சார பைக் மாடலாக அல்ட்ராவைலட்டின் எஃப்77 மாடலே இருக்கின்றது.
இதையே அதன் புதுமுக இ-பைக் வீழ்த்த இருக்கின்றது. எஃப் 77 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ ஆகும். இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 307 கிலோ மீட்டர் ரேஞ்ஜை பெற முடியும்.
இந்த சூப்பரான பைக்கிற்கே சூப்பரான வாரண்டி திட்டத்தை அல்ட்ராவைலட் அறிவித்து இருக்கின்றது. அல்ட்ராவைலட் அதன் எஃப்77 பைக்கை எஃப்77 ரெகோன் (F77 Recon) மற்றும் எஃப்77 ஸ்பேஸ் எடிசன் (F77 Space Edition) ஆகிய சிறப்பு பதிப்புகளிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் கை தேர்ந்த நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. அது தயாரிக்கும் பைக் மட்டுமல்ல பேட்டரி பேக், மோட்டார் என அனைத்தும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே வாரண்டியை வழங்குவதிலும் தனித்துவமான நிறுவனமாக அது மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








