இந்த பைக் வாங்கும் ஆசையை குழி தோண்டி புதைக்கனும் போலருக்கே! இந்த டிசம்பரிலேயே வாங்கிவிடுவது சிறந்தது!!
அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), இந்தியாவின் ஒரேயொரு சூப்பர் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தற்போதைக்கு எஃப்77 மேக் 2 (F77 MACH 2) என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் பைக்கை மட்டுமே விற்பனை செய்கிறது. இந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கின் விலை ஏற்கனவே ரூ.3 லட்சமாக இருக்கும் நிலையில், விலையை மேலும் உயர்த்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பெங்களூரில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒரு நிறுவனம்தான், அல்ட்ராவொய்லெட் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் பைக்காக எஃப்77 அறிமுகம் செய்யப்பட்டது. அதுதான், அதன்பின் எஃப்77 மேக் 2 என்றாகியது. அதாவது, முன்பு விற்பனையில் இருந்த எஃப்77 பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக எஃப்77 மேக் 2 அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 2025ஆம் ஆண்டு முதல் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கின் விலையை அதிகரிக்க உள்ளதாக அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கின் விலை 5% உயர்த்தப்பட உள்ளது.
எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.2.99 லட்சமாக உள்ளது. இதில் 5% என்றால், பைக்கின் விலை ரூ.15,000 என்கிற அளவில் அதிகரிக்கப்பட உள்ளது. அப்படியென்றால், எஃப்77 மேக் 2 பைக்கின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.15 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரங்கள் அதிகமாக வரும். மேலும், மேலே குறிப்பிடப்பட்ட ரூ.2.99 லட்சம் என்பது எஃப்77 மேக் 2 பைக்கின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ரெகான் என்கிற வேரியண்ட்டிலும் இந்த எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.99 லட்சமாக உள்ளது. 2025 ஜனவரி 1 முதல் இந்த ரெகான் வேரியண்ட்டின் விலை அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.

ஏனெனில், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கின் குறிப்பிட்ட வேரியண்ட்களின் விலைகளை மட்டுமே அதிகரிக்க உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்த 2 வேரியண்ட்களில் மட்டுமே இந்த எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்படுவதால், அதில் ஒன்றின் விலை மட்டுமே அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
பைக்குகளை உற்பத்தி செய்வதில் அதிகரித்துவரும் செலவை இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுப்பக்கம், இந்த டிசம்பர் மாதத்தில் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கை வாங்குபவர்களுக்கு வருட-இறுதி சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையின்படி, அதிகப்பட்சமாக ரூ.14,000 வரையிலான பணத்தை எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கை இந்த டிசம்பர் மாதத்தில் வாங்குபவர்கள் மிச்சப்படுத்தலாம்.
இந்த சலுகை ஆனது அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கின் இரு வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கில் 10.3kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 323கிமீ தொலைவிற்கு பைக்கை ஓட்டிச் செல்லலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கில் 0-இல் இருந்து 60kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 பைக் தனி கவனத்தை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இது சூப்பர் எலக்ட்ரிக் பைக் என்பதினால். இத்தகைய மோட்டார்சைக்கிளின் விலை அதிகரிக்கப்பட உள்ளது இந்த பைக்கை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கும். ஆனால், இலாபத்துடன் வணிகத்தை நடத்த வேண்டுமென்றால், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் இந்த விலை அதிகரிப்பை கொண்டுவந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications








