அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக் ரைடு ரிவியூ வீடியோ.. ராக்கெட்டே தோற்றுவிடும் போல!
அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 (Ultraviolette F77 Mach 2) எலெக்ட்ரிக் பைக்கை ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு அண்மையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பைக்கை நாங்கள் பலநிலைகளில் ரைடு செய்து அலசி ஆராய்ந்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு அந்த பைக் பற்றிய பல்வேறு சுவாரஷ்ய தகல்கள் கிடைத்தன. இதையே இந்த வீடியோ வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முன் வந்துள்ளோம். பைக் பற்றிய அனைத்து தகவலையும் இந்த வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.
எஃப்77-வைக் காட்டிலும் எஃப் 77 மேக் 2 கணிசமான மாற்றங்களையேக் கொண்டு இருக்கின்றது. என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை சற்றே உற்று பார்த்தால் மட்டுமே அறிய முடியும். குறிப்பாக, நிற தேர்வில் மிக பெரிய மாற்றத்தை அல்ட்ராவைலட் செய்திருக்கின்றது. எஃப்77இல் வெறும் மூன்று விதமான வண்ண ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
ஆனால், புதியதில் ஒட்டுமொத்தமாக 9 விதமான வண்ண தேர்வுகளில் வழங்கப்படுகின்றன. அவை லைட்னிங் ப்ளூ (Lighting Blue), ஆஸ்ட்ராய்டு கிரே (Asteroid Grey), டர்போ ரெட் (Turbo Red), ஆஃப்டர் பர்னர் யெல்லோ (Afterburner Yellow,) ஸ்டீல்த் கிரே (Stealth Grey), காஸ்மிக் பிளாக் (Cosmic Black), பிளாஸ்மா ரெட் (Plasma Red), சூப்பர் சோனிக் சில்வர் (Supersonic Silver) மற்றும் ஸ்டெல்லர் ஒயிட் (Stellar White) ஆகும்.

நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்த எஃப்77 மேக்2 ரெகான் வேரியண்டில் 10.3kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 323 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், 40.23 பிஎச்பி மற்றும் 100 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மின்சார பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 155கிமீ ஆகும்.


Click it and Unblock the Notifications








