இந்தியாவின் முதல் சூப்பர் எலக்ட்ரிக் பைக் மெர்சலா இருக்கு!! மேட்-இன்-இந்தியா பைக் என்று சொன்னா நம்பவே முடியல!
அல்ட்ராவயலெட் (Ultraviolette) நிறுவனம் அதன் புதிய எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவயலெட் நிறுவனம் இந்தியாவின் முதல் சூப்பர் எலக்ட்ரிக் பைக்காக விளங்கும் அதன் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கின் 2வது ஜென்ரேஷனாக மேக் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
புதிய அல்ட்ராவயலெட் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கை ஓட்டி பார்க்கும் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், இந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை அருகாமையில் காணும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது, எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கை சுற்றிலும் நாங்கள் எடுத்த காட்சிகளை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
ஸ்டாண்டர்ட் மற்றும் ரெகான் என 2 விதமான வேரியண்ட்களில் புதிய அல்ட்ராவயலெட் எஃப்77 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.99 லட்சமாகவும், ரெகான் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான விலை மட்டுமே ஆகும்.

புதிய எஃப்77 மேக்-2 பைக்கில் 10.3 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 323கிமீ தொலைவிற்கு செல்லலாம். இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக்கின் டாப்-ஸ்பீடு 155கிமீ ஆகும். இந்த பைக்கில் பயன்படுத்தப்படும் 30 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 40.2 எச்பி மற்றும் 100 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.


Click it and Unblock the Notifications








