40க்கும் மேற்பட்ட நாடுகள்ல விற்பனை செய்வதற்கான சான்றை பெற்ற நம் தயாரிப்பு! உலக நாடுகளை வாயடைக்க வச்சுட்டாங்க!
இந்தியாவை மையமாகக் கொண்டு மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக எஃப்77 மேக் 2 (F77 Mach 2) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உள்ளது. இந்த மின்சார பைக்கே, ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம் (United Nations Economic Commission for Europe)-த்திடம் இருந்து உலகளாவிய விற்பனைக்கான சான்றை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அல்ட்ராவைலட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.
யுனெஸ் இடம் இருந்து இத்தகைய சான்றை பெறும் முதல் இந்திய மின்சார மோட்டார்சைக்கிள் இதுவே ஆகும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால் ஐரோப்பிய யூனியன் பிரதேசங்கள் உட்பட உலக அளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனைச் செய்வதற்கான அங்கீகாரத்தையும் அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 இ-பைக் பெற்றிருக்கின்றது.

இந்தியாவிற்காக இந்தியாவில் ஓர் தயாரிக்கப்பட்ட ஓர் மின்சார பைக்கே எஃப்77 மேக் 2 ஆகும். இது எல்3இ சான்றையே பெற்றிருக்கின்றது. இது எஃப்77 மேக் 2 தரத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய விருதாகும். அல்ட்ராவைலட் இந்த மின்சார பைக்கை ஐரோப்பிய நாடுகளில் 9,990 யூரோக்களுக்க விற்க திட்டமிட்டு இருக்கின்றது.
இத்துடன், அடுத்த மாதம் 5 தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மிலன் வாகன கண்காட்சியில் இந்த பைக்கைக் காட்சிப்படுத்தவும் அல்ட்ராவைலட் திட்டமிட்டு உள்ளது. இதன் வாயிலாக உலக சந்தையை தன் பக்கம் இந்த பைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், எல்3இ (L3e) சான்றை பெற்றிருப்பதனால் இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஏ1 மற்றும் ஏ2 லைசென்ஸ் பெற்றவர்களால் மட்டுமே இயக்கிக் கொள்ள முடியும். அல்ட்ராவைலட் நிறுவனம் சமீபத்திலேயே ஐரோப்பிய சந்தைக்காக எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக்கை ஏற்றுமதி செய்தது. பைக்குகளை மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்திருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த நிலையிலேயே தரமான சான்று ஒன்றை எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக் பெற்றிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் பைக்கே எஃப்77 மேக் 2 ஆகும். அதில் அதிகபட்சமாக 27 kW பவரை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 40.2 எச்பி மற்றும் 100 என்எம் டார்க் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ ஆகும். அதேவேளையில், வெறும் 2.9 செகண்டுகளிலேயே 0-60 கிமீ எனும் வேகத்தை சுலபமாக இந்த பைக் எட்டிவிடும். இதேபோல், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட அதற்கு வெறும் 7.8 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.
இத்தகைய அதிக ஆற்றல்மிக்க இ-பைக்கையே இந்தியாவில் தற்போது அல்ட்ராவைலட் விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதுவே ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கி இருக்கின்றது. இந்த பைக்கில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்ப்டடு இருக்கும். கிளைட் (Glide), காம்பேட் (Combat) மற்றும் பாலிஸ்டிக் (Ballistic) ஆகியவையே அவை ஆகும்.
ஓர் முழு சார்ஜில் இந்த பைக்கில் 323 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். நிஜ வாழ்க்கை பயன்பாட்டின்போது இதைவிட சற்று குறைவான ரேஞ்சையே இந்த பைக் வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுடன் பிரத்யேக டிஜிட்டல் அனுபவத்தை வழங்கக் கூடிய 5 அங்குல டிஎஃப்டி திரையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும்.
இது அல்ட்ராவைல்ட்டின் ஆட்டோமேட்டிக் லினெக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனும் அம்சத்தைக் கொண்டதே இந்த திரை ஆகும். இதுபோன்று இன்னும் பலதரப்பட்ட அம்சங்களை இந்த இ-பைக் அதனுள் தாங்கி இருக்கும். 7.1 kWh மற்றும் 10.3 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அல்ட்ராவைலட் நிறுவனம் மற்றுமொரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. எஃப்99 எனும் இ-பைக்கையே அது விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








